கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலகின் முக்கிய விளையாட்டு வீரர்கள்!!!

  • IndiaGlitz, [Monday,April 27 2020]

 

கொரோனாவால் ஒலிம்பிக் உள்ளிட்ட பல முககிய விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு அல்லது ஒத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில் உலகின் முக்கிய விளையாட்டு வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்களைப் பற்றிய சிறு தொகுப்பு-

1.என்.எப்.எல் அணியின் நட்சத்திரமான அமெரிக்க வீரர் வான் மில்லருக்கு கொரோனா இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

2. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் முன்னாள் அணிகளுக்கு ஆலோசகராகப் பணியாற்றிய நார்மன் ஹண்டர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியது.

3. நியூயார்க்கின் நிக்ஸ் அணியின் உரிமையாளர் ஜேம்ஸ் க்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

4. ஒலிம்பிக் தகுதிப்போட்டிக்கு சென்று விட்டு திரும்பிய துருக்கி குத்துச்சண்டை கூட்டமைப்பு மற்றும் தேசிய அணி உறுப்பினரான செர்ஹாட் குலெர் மற்றும் அவரது பயிற்சியாளருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது.

5. இத்தாலிய கால்பந்து அணியின் கோல் கீப்பர் மார்கோ ஸ்போர் டெல்லோவுக்கு கொரோனா இருப்பதாக மார்ச் 24 அன்று செய்திகள் வெளியாகியது.

6. ஸ்பெயினின் கால்பந்து கிளப்பில் மட்டும் 15 கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மார்ச் 18 இல் வெளியிட்ட அறிக்கையில் பயிற்சி வீரர்கள் 3 பேர் மற்றும் பணியாளர்கள் 7 பேருக்கு கொரோனா இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

7. 2018 இல் உலகக்கோப்பை வென்ற பிளேஸ் மாதுயிடிக்கு கொரோனா இருப்பதாக அவரே தனது சமூகவலைத் தளப்பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

8. டேனியல் ருகானி – ஜுவென்டஸ் வீரரும் இத்தாலிய அணிக்கு ஆலோசகராகவும் இருந்து வரும் ருகானிக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

9. இங்கிலாந்து கால்பந்து பிரீமியர் அணியின் ஆலோசகர் மைக்கேல் ஆர்டெட்டா வுக்கு கொரோனா இருப்பதாக மார்ச் 12 ஆம் தேதி செய்திகள் வெளியாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.

10. இத்தாலி மற்றும் அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்து வீரர்களும் தங்களுக்கு கொரோனா இருப்பதாக செய்திகள் வெளியிட்டனர். அதில் பாலோ டைபாலா, காலம் ஹட்சனும் அடங்குவர்.

11. ஜாஸ் வீரரான டோனோவன் மிட்செல் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்து இருந்தார்.

12. என்.பி.ஏ ப்ரூக்ளின் கூடைப்பந்து அணியின் வீரர்கள் நான்கு பேருக்கு கொரோன நோய்த்தொற்று இருப்பது மார்ச் 17 அன்று உறுதிப்படுத்தப்பட்டது.

12. சைக்கிள் பந்தய ஓட்டுநரான பெர்னாண்டோ கவிரியா மார்ச்12 அன்று கொரோனா பரிசோதனையில் நோய்த்தொற்று இருப்பதாக தெரிவித்தார். சைக்கிள் பந்த வீரரான டிமிட்ரி ஸ்ட்ராக்கோவ் க்கும் கொரோனா இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

13. இத்தாலி கால்பந்து கிளப்பின் ஐந்து வீரர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

14. சீன சூப்பர் லீக்கில் விளையாடி வரும் மான்செஸ்டர் அணியின் கால்பந்து வீரரான மாரூனே ஃபெல்லெய்னிக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

More News

கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலகின் சினிமா பிரபலங்கள்!!!

கொரோனா வைரஸ் தொற்றால் பல முக்கியத் திரைப்படக் கலைஞர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு.

இதுவரை உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசியல் வாதிகள்!!! தற்போதைய நிலைமை என்ன???

கொரோனா நோய்த்தொற்று பரவல் விகிதம் ஏழை நாடுகளைவிட பணக்கார நாடுகளில் அதிகமாக இருக்கிறது.

இந்த இரண்டை மட்டும் என்னால் மறக்க முடியாது: மலரும் நினைவுகளில் வெங்கட்பிரபு

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய 'சென்னை 600028 திரைப்படம் வெளியாகி இன்றுடன் 13 வருடங்கள் முடிந்துவிட்ட நிலையில் இன்று காலை இதுகுறித்து வெங்கட்பிரபு பதிவு செய்த

இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்: விஜய் ரசிகருக்கு மாளவிகா மோகனன் பாராட்டு

விஜய் நடித்த மாஸ்டர்' படம் குறித்து விஜய் ரசிகர் ஒருவர் கார்ட்டூனை ஒன்றை டுவிட்டரில் பதிவு செய்திருந்த நிலையில் அந்த பதிவில் 'மாஸ்டர்' குழுவினர் ஊரடங்கில் என்ன செய்து கொண்டிருப்பார்கள்

2025ஆம் ஆண்டு வரை 'வொர்க் ஃப்ரம் ஹோம்' தான்: டிசிஎஸ் அதிரடி முடிவு?

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டிருப்பதால் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யும் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' முறையை கையாண்டு வருகின்றன