கிணறு தோண்டிய பள்ளத்தில் ரத்தினக்கல்? ஒரே நாளில் ரூ.700 கோடிக்கு அதிபதியான சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இலங்கையில் வணிகர் ஒருவர் தன்னுடைய வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தில் தற்செயலாக கிணறு தோண்டி இருக்கிறார். அந்தப் பள்ளத்தில் வித்தியாசமான கல் ஒன்று கிடைத்து இருக்கிறது. இந்தக் கல்லை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு எடுத்து வைத்த அவர் தற்போது ரூ.745 கோடிக்கு அதிபதியாகி இருக்கிறார்.
இலங்கையில் ரத்தினபுரா பகுதியில் ரத்தினக்கற்கள் அதிகளவு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வைரக்கல் வியாபாரம் செய்துவரும் கமாகே எனும் நபர் தன்னுடைய ரத்தினபுரா வீட்டின் பின்புறம் ஒரு கிணற்றைத் தோண்டி இருக்கிறார். அப்போது வித்தியாசமான ஒரு கல் கிடைத்து இருக்கிறது.
நீலநிறத்தில் இருந்த அந்த கல்லானது ஒரு உயர்த்தரமான ரத்தினக் கற்களின் தொகுப்பு என்பதை தெரிந்து கொண்ட அவர் அதை அரசாங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டார். தற்போது அந்தக் கல்லின் மதிப்பை அளவிட்ட அதிகாரிகள் விற்பனைக்கு வைத்துள்ளனர். உயர்த்தர நீல நிறத்திலான அந்த ரத்தினக்கற்களின் தொகுப்பு இந்திய மதிப்பில் ரூ.745 கோடிக்கு விற்பனையாகும் எனக் கூறப்படுகிறது.
விலையுயர்ந்த இந்த ரத்தினக்கற்களானது கிட்டத்தட்ட 40 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்றும் அதிகாரிகள் கணித்துள்ளனர். 510 கிலோ அதாவது 25 லட்சம் காரட் எடையுள்ள இந்தக் கற்களின் தொகுப்பை அருங்காட்சியத்திற்கு வைக்கும் முயற்சியும் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இத்தனைய அதிசயம் கொண்ட ரத்தினக்கற்களின் தொகுப்பால் தற்போது கமாகே ரூ.745 கோடிக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout