அமெரிக்காவின் பென்டகனுக்கே சவால் விடும் இந்திய அலுவலகம்… முதல் வரலாற்று சாதனை…!

  • IndiaGlitz, [Wednesday,July 19 2023]

அமெரிக்காவின் இராணுவத் தலைமையிடமாக இயங்கிவரும் பென்டகனே உலகில் மிகப்பெரிய அலுவலமாகக் கருதப்படுகிறது. கடந்த 80 வருடங்களில் இந்தக் கட்டிடத்தின் சிறப்பைப் பார்த்து மெய்சிலிர்க்காதவர்களே இல்லை என்று கூறப்படும் நிலையில் பென்டகனையே விஞ்சும் அளவிற்கு இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அலுவலகம் விரைவில் துவங்கப்பட இருக்கும் தகவல் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத் துறை அலுவலகமான பென்டகன் உலக அளவில் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டிடத்தில் இராணுவத்தின் ஒட்டுமொத்த நிர்வாகமும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே இடத்தில் மிகப் பிரம்மாண்டமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் பென்டகனைப் போன்றே இந்தியாவில் வைரத் தொழிலை ஒருங்கிணைக்கும் வகையில் குஜராத் மாநிலம் சூரத்தில் மிகப் பிரம்மாண்டமாக ஒரு கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறது. மிக விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கும் இந்தக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார்.

இந்தியாவில் அதிகளவிலான வைரம் வியாபாரம் சூரத்தில்தான் நடைபெற்று வருகிறது. ஆனாலும் வைரத்தை வெட்டுதல், பட்டைத் தீட்டுதல் போன்ற பல வேலைகளுக்காக வியாபாரிகள் மும்பைக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் வைரம் தொடர்பான தொழில் மற்றும் வியாபாரத்தை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் ஒரு பிரம்மாண்ட கட்டிடம் சூரத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

சூரத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தக் கட்டிடமானது 35 ஏக்கர் பரபரப்பளவில் 15 மாடிகளைக் கொண்டுள்ளது. மேலும் இதில் 9 செவ்வக வடிவிலாக கட்டடிடங்கள் எழுப்பப்பட்டு அதை ஒருங்கிணைக்கும் பெரிய இணைப்பு கட்டிடமும் உருவாக்கப்பட்டு உள்ளது. பார்ப்பதற்கு மிக பிரம்மாண்ட தோற்றத்தைக் கொண்டிருக்கும் இந்தக் கட்டிட வளாகத்தில் வாகன நிறுத்தம் மற்றும் பொழுபோக்கு அம்சங்கள் கூடிய உணவகங்களும் உருவாக்கப்பட இருக்கிறது.

இதனால் வைரத்தை வெட்டுதல், பட்டைத் தீர்ட்டுதல் மற்றும் வியாபாரம் என்று அனைத்திற்கும் வசதியாக 4,200 அலுவலகங்கள் இதில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் 65,000 தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் இதில் பணியாற்ற முடியும். லாப நோக்கமற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கட்டிடத்தை சூரத் வைர பரிவர்த்தனை நிறுவனமான எஸ்டிபி உருவாக்கி இருக்கிறது.

4 வருடங்களாக உருவாக்கப்பட்டு வரும் இந்தக் கட்டிடத்தை சிறந்த கட்டிடக்கலைக்கு பெயர் போன மார்போஜெனிஸ் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இதனால் 90% வைர வேலைகள் இனிமேல் சூரத் கட்டிடத்திலேயே நடக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் மும்பைக்கு செல்ல வேண்டிய தேவையே இருக்காது என்று கூறும் வைர வியாபாரிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் இப்போதே சூரத் கட்டிடத்தில் தங்களுக்கான கடைகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

More News

உன்னை கொண்டாடுகிறேன் அன்பே… பிரபல நடிகையின் பிறந்தநாளில் கணவர் உருக்கம்!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்து தற்போது ஹாலிவுட் சினிமாவில் மாஸ் காட்டிவரும் நடிகை பிரியங்கா சோப்ரா

'ஜவான்' படத்தில் நயன்தாராவுக்கு கொடுத்த முக்கியத்துவம்.. அட்லி செய்த தரமான சம்பவம்..!

ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஜவான்' திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கும் நிலையில் அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் தரும் வகையில் இண்ட்ரோ பாடல்

அமெரிக்காவில் உலக நாயகன் கமல்ஹாசன்.. ஸ்டைலிஷ் புகைப்படம் வைரல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் அமெரிக்கா சென்று இருக்கும் நிலையில் அவரது புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நானும் மாலத்தீவில் தான் இருக்கேன்.. நீச்சல்குள புகைப்படத்தை வெளியிட்ட மேகா ஆகாஷ்..!

தமிழ் திரை உலக நடிகைகள் உட்பட இந்திய திரை உலக நட்சத்திரங்கள் அவ்வப்போது மாலத்தீவு சென்று வருகின்றனர் என்பதும் குறிப்பாக அங்கு சென்றவுடன் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும்

கமல், விஜய் சேதுபதி பாணியில் கார்த்தி.. என்ன செய்துள்ளார் பாருங்கள்..!

கமல்ஹாசன், விஜய் சேதுபதி பாணியில் முன்னணி நடிகர் ஒருவரின் திரைப்படத்திற்கு கார்த்தி குரல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.