நீலநிறத்தில் உலகின் மிகப்பெரிய ரத்தினக்கல்… வியந்துபோன பொதுமக்கள்!

  • IndiaGlitz, [Monday,December 13 2021]

இலங்கையில் உலகிலேயே மிகப்பெரிய ரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பொதுமக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. 310 கிலோ எடையுள்ள இந்தக் கல்லைப் பார்த்து பொதுமக்கள் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ரத்தினத்தின் தலைநகராக கருதப்படும் இலங்கை நாட்டின் ரத்தினகிரியில் அவ்வபோது விதவிதமான இரத்தினக் கற்கள் கண்டெடுக்கப் படுகின்றன. ஆனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இலங்கையில் உலகிலேயே மிகப்பெரிய இரத்தினக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. நீலநிறத்தில் உள்ள இந்தக் கல்லின் எடை 310 கிலோ என்றும் சர்வதேச மதிப்பீட்டாளர்கள் இந்தக் கல்லை இன்னும் மதிப்பிடவில்லை என்றும் கூறப்படுகிறது.

கொழும்புவில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹொரணையில் இந்த இரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது உரிமையாளரின் வீட்டிலேயே இந்தக் கல் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. இந்தக் கல்லை பொதுமக்கள் அதிசயமாகப் பார்த்துச் செல்வதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஜாக்கியாகிவிட்ட ரவீந்திர ஜடேஜா… அசத்தலான வீடியோ வைரல்!

இந்தியக் கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக அசத்திவரும் ரவீந்திர ஜடேஜா தற்போது குதிரை ஜாக்கியாக மாறியிருக்கும் வீடியோவை

5 மொழிகளில் வெளியாகும் சூர்யாவின் அடுத்த படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூர்யாவின் அடுத்த திரைப்படம் 5 மொழிகளில் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சூர்யா ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஜாமீன்தாரர் சொத்துக்களுக்கு உரிமம் கோரலாமா? 'மாநாடு' சர்ச்சை குறித்து பாரதிராஜா கேள்வி!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் விவகாரம் குறித்து சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் நீதிமன்றம் சென்றார் என்பதும் இதுகுறித்து திரையுலகில் பெரும்

இரண்டு பிரபல நடிகைகளுக்கு கொரோனா தொற்று: தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை!

இரண்டு பிரபல நடிகைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இவங்க வேறலேவல்… நடந்தே அலுவலகத்திற்கு வந்த பெண் கலெக்டர்!

தமிழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாட்டை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் அனைவரும் வாகனங்களைத் தவிர்த்து