அகமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் – ட்ரம்ப் திறந்து வைக்கிறார்
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகிற 25, 26 ஆம் தேதிகளில் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார். அந்த வருகையின் போது சில சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெறும் என எதிர்ப் பார்க்கப் பட்ட நிலையில் தற்போது அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின் திறப்பு விழா பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் அடுத்த மெதேராவில் சர்தார் படேல் கிரிக்கெட் மைதானம் அமைந்திருந்தது. இந்த மைதானம் 1982 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. 12 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 24 ஒரு நாள் போட்டிகளைக் கண்ட இந்த மைதானத்தில் தான் சுனில் கவாஸ்கர் தனது டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். 1999 ஆம் ஆண்டு சச்சின் இரட்டை சதம் அடித்ததும் இந்த மைதானத்தில் தான் என்பதும் மேலும் சிறப்புக்குரியது.
இந்த மைதானம் கட்டப் பட்டு பல ஆண்டுகள் ஆனதால், அதன் மறுசீரமைப்பு பணியில் குஜராத் கிரிக்கெட் சங்கம் ஈடுபட்டது. இதற்கான வேலைத் திட்டங்களை 2017 ஆம் ஆண்டில் இருந்தே கிரிக்கெட் சங்கம் தொடங்கியது. இதற்காக, சர்தார் படேல் கிரிக்கெட் மைதானம் சுக்கு நூறாக உடைக்கப் பட்டு தரை மட்டம் ஆக்கப் பட்டது. சிறந்த கட்டிக்கலை நிபுணரான பாப்புலஸ் தலைமையில் இந்தப் பணிகள் ஒப்படைக்கப் பட்டிருந்தன. தற்போது கிரிக்கெட் மைதானத்தின் பணிகள் முழுவதும் நிறைவடைந்து அதன் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்திய பயணத்தின்போது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் திறக்கப் பட உள்ளது என்பது கிரிக்கெட் ரசிகர்களிடம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியர்களிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் பல சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் இருக்கின்றன என்றாலும் இது உலகின் மிகப் பெரிய மைதானம் என்பதால் சிறப்புடையதாகக் கருதப் படுகிறது.
இதுவரை உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்றால் ஆஸ்திரேலியா மெர்ல்பேன் நகர் மைதானம் என்றே கருதப் பட்டு வந்தது. இந்த மைதானத்தில் சுமார் 1,00,024 ரசிகர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து கிரிக்கெட் விளையாட்டை கண்டு ரசிக்கலாம் என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது இந்த பெருமையை முறியடிக்கும் விதமாக சர்தார் படேல் கிரிக்கெட் மைதானம் சீரமைக்கப் பட்டு மறு அவதாரம் எடுத்துள்ளது. பழைய சர்தார் படேல் மைதானத்தில் வெறும் 54 ரசிகர்கள் மட்டுமே அமர முடியும். தற்போதுள்ள மைதானத்தில் 1,10,000 ரசிகர்கள் அமரலாம். அதோடு விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான பல்வேறு வசதிகளும் இந்த மைதானத்தில் அமைக்கப் பட்டுள்ளன என்பதே சிறப்பாகக் கருதப்படுகிறது.
சிறம்பம்சம்
சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் ரூ.700 கோடி பட்ஜெட்டில் இந்த மைதானம் கட்டி முடிக்கப் பட்டுள்ளது. இந்த மைதானத்தின் வடிவமைப்பில் பல விளையாட்டுகளுக்கும், கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு என தனிப்பட்ட வசதிகளும் ஏற்படுத்தப் பட்டுள்ளன. 50 க்கும் மேற்பட்ட அறை, 76 கார்ப்பரேட் பெட்டிகள், 4 உடை மாற்றும் அறைகள், கிரிக்கெட் வீரர்களுக்கு 3 பயிற்சி மைதானங்கள், உள்புறமாக ஒரு பயிற்சி அகாடமி, ஒலிம்பிக் போட்டியே நடத்தும் அளவிற்கு பெரிதான ஒரு நீச்சல் குளம் ஆகியவை இந்த மைதானத்தின் சிறம்சம்ங்களாகும்.
3,000 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 10,000 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு மைதானத்தில் பார்க்கிங் வசதிகள் செய்யப் பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது.
வீரர்களின் ஓய்வறைகளில் இந்திய கலையைப் பிரதிபலிக்கும் விதமாக பல்வேறு அலங்காரங்கள் செய்யப் பட்டுள்ளன. இது மற்ற நாட்டு வீளையாட்டு வீரர்களிடம் நம் நாட்டு பெருமையை எடுத்துக் காட்டும். மேலும் உணவு விற்பனையகம், கால்பந்து, ஹாக்கி, கூடைப் பந்து, கபடி, குத்துச் சண்டை போன்ற விளையாட்டுகளுக்கான அகாடமிகளும் இந்த மைதானத்திலேயே அமைக்கப் பட்டுள்ளன. தடகள வீரர்களுக்கான ஓடுதளமும் இந்த மைதானத்தின் முக்கிய சிறம்பம்சம் எனலாம்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் நமது பிரதமர் நரேந்திர மோடி இந்த விளையாட்டு மைதானத்தை திறந்து வைக்க உள்ளார். உலக அளவில் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற பெருமையை சர்தார் படேல் மைதானம் தட்டிச் செல்ல உள்ளது என்பது சிறப்புக்குரியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout