உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள்: போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய நடிகர் !!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகப் பிரபலங்களில் யார் அதிகச் சம்பளம் வாங்குகிறார்கள் என்ற பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் போப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு போப்ஸ் வெளியிட்டுள்ள உலகில் அதிகச் சம்பளம் வாங்கும் பிரபலங்கள் 100 பட்டியலில் ஒரே ஒரு இந்தியர் மட்டும் இடம் பெற்றிருக்கிறார். பிரபல பாலிவுட் நட்சத்திரமான அக்ஷய் குமார் இந்தப் பட்டியலில் தற்போது 52 ஆவது இடத்தைப் பிடித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டும் இவர் ஒருவரே இந்தப் பட்டியலில் இடம்பிடித்து இருந்தார். ஆனால் கட்ந்த ஆண்டின் வருமானத்தை விட தற்போது நடிகர் அக்ஷய் குமாரின் சம்பளம் குறைந்து அவர் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார். கடந்த ஆண்டு சுமார் 65 மில்லியன் டாலராக இருந்த இவரின் சம்பளம் தற்போது 48.5 மில்லியன் டாலராக குறைந்து இருக்கிறது.
போப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள பட்டியலில் அதிகச் சம்பளம் மட்டுமல்ல கொரோனா நிவாரண நிதிக்கு அதிகத் தொகை கொடுத்த இந்தியராகவும் நடிகர் அக்ஷய் குமார் இடம்பெற்று இருக்கிறார். இவர் கொரோனா நிவாரண நிதியாக 4.5 மில்லியன் டாலரை கொடுத்து இருக்கிறார். இந்திய அளவிலும் இந்தத் தொகை மிகவும் அதிகம் என்பதை பலரும் வரவேற்று இருந்தனர். போப்ஸ் பட்டியலில் 590 மில்லியன் டாலரை வருமானத்துடன் கைலி ஜென்னர் முதல் இடத்தில் இருக்கிறார். இவரை அடுத்து முதல் 10 இடத்தில் ராப் பாடகர் கன்யே வெஸ்ட், ரோஜர் பெடரர், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியனல் மெஸ்ஸி, டைலர் பெர்ரி, நெய்மர், ஹாவர்ட் ஸ்டெர்ன், லெப்ரான் ஜேம்ஸ், ட்வைன் ஜான்சன் ஆகியோர் உள்ளனர். இவர்களைத் தவிர ஹாலிவுட் பிரபலங்கள் வில் ஸ்மித் (69), ஏஞ்சலினா ஜோலி (99), பாப் பாடகர் ரிஹான்னா (60), கேத்தி பெர்ரி (86), ஜெனிபர் லோபஸ் (56) ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments