உலக மகா கண்டுபிடிப்பு??? டிரெண்ட் ஆகிவரும் கொரோனா புடவைகளை கலாய்க்கும் நெட்டிசன்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் உலக நாடுகள் மத்தியில் இதுவரை இல்லாத அளவிற்குத் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்து இருக்கிறது. இப்படி உலகமே “ரண களத்தில் இருக்கும் போது“ கொரோனா பெயரில் புதிதாக புடவைகள் ட்ரண்ட்ராகி வருகிறது. இதையும் நம் நெட்டிசன்கள் விட்டு வைக்காமல் கலாய்த்து வருகின்றனர்.
இதுவரை புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது அந்த பெயரில் புடவைகளை உருவாக்கி நல்ல வருமானத்தை பார்த்து வந்தனர் வணிகர்கள். அதையும் நம் பெண்கள் விட்டுவைக்காமல் வாங்கி மகிழ்வது வழக்கம். கொரோனா என்பது உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் ஒரு வைரஸ். உலகமே அதைப் பற்றிய பயத்தில் உறைந்து இருக்கும்போது கொரோனா பெயரில் புதிய புடவைகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது கடைகளில் புதிதாக கொரோனா வைரஸ் படம் போட்ட புடவைகள் தொங்க விடப் பட்டு இருக்கின்றன. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் வெளியாகிய நிலையில் அதை நம் நெட்டிசன்கள் தாறுமாறாக கலாய்த்து வருகின்றனர்.
டிவிட்டர் பக்கத்தில் “உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்தை தேடிவரும் நிலையில் தமிழனின் புது கண்டுபிடிப்பு கொரோனா வைரஸ் சேலை” என்று ஒரு நெட்டிசன் கிண்டல் செய்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
மேலும், இண்ஸ்டா கிராம் பக்கத்தில் கோரா டிசைனர் என்ற பக்கமும் தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது. கொரோனா வைரஸ் மற்றும் மாஸ்க்குகள் அணிந்துள்ள படங்கள் இவர்கள் உருவாக்கிய புடவைகளில் பளிச்சிடுகின்றன. இந்த பக்கத்தை நமது தமிழனின் கண்டுபிடிப்பு என்று நெட்டிசன்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸூக்கு பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்தை தேடிவரும் நிலையில், தமிழனின் புது கண்டுபிடிப்பு கொரானா வைரஸ் சேலை... ????????#CoronaVirus #CoronaOutBreak #COVID19 #coronavaccine #CoronaVirusSaree pic.twitter.com/rzZXxT6Zm3
— Tamil Thisai (@Tamil_Thisai) March 11, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout