கொரோனாவில் கொடிக்கட்டி பறக்கும் உலகப் பணக்காரர்கள்… என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நோய்த்தொற்றால் உலகம் முழுவதும் வறுமை, சுகாதாரச் சீர்கேடு, பொருளாதார இழப்பு எனப் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பொதுமக்கள் பலரும் அவதியுற்று வருகின்றனர். ஆனால் இதே சூழலில் உலகப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு இரண்டு மடங்காக உயர்ந்து இருக்கும் தகவல் பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
வறுமை ஒழிப்பை மையமாக வைத்து இயங்கி வரும் சர்வதேச அமைப்பான Oxfam கொரோனா நேரத்தில் உலகப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்து இருக்கிறது எனும் புள்ளிவிவரக் கணக்கை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி உலகின் முன்னணி 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு ஒட்டுமொத்தமாக 700 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 1.5 டிரில்லியன் டாலராக உயர்ந்து உள்ளதாகத் தகவல் வெளியிட்டு இருக்கிறது.
இதனால் உலகின் முன்னணி 10 பணக்காரர்கள் குவித்த சொத்து மதிப்பு முந்தைய அளவைவிட 1.3 பில்லியன் டாலர் அதிகரித்து தற்போது இந்திய மதிப்பில் 9 ஆயரத்து 600 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த மதிப்பை பார்த்து பல உலக நாடுகள் திகைத்து வருகின்றன.
இதற்கு மாறாக உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் சுகாதார வசதி ஏற்படடு இருக்கிறது. இதனால் பல நாடுகளில் பொதுமக்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் பருநிலை மாற்றம் காரணமாக தினம்தோறும் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இத்தகைய காரணங்களால் உலகம் முழுவதும் 21 ஆயிரம் பேர் தினம் தோறும் இறந்துபோவதாகவும் கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. இத்தனை நெருக்கடிக்கு மத்தியில் உலகின் டாப் 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்து இருக்கும் தகவல் பலருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com