உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் சிஎஸ்கே வீரர்.. பிசிசிஐ அறிவிப்பு..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் சிஎஸ்கே வீரர்.. பிசிசிஐ அறிவிப்பு..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி சற்று முன் அறிவிக்கப்பட்ட உள்ள நிலையில் அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஒருவர் இடம் பெற்றுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் இதில் முதல் இரண்டு இடத்தை பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரஹானே இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்த தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக 71 ரன்கள், பெங்களூரு அணிக்கு எதிராக அதிவேக 37 ரன்கள், மும்பை அணிக்கு எதிராக 61 ரன்கள் எடுத்தார் என்பதும் இதையடுத்து அவருக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியின் வீரர்கள் விவரங்கள் இதோ: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ரஹானே, கேஎல் ராகுல், பரத், அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், உனாத்கட்.