கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கும் உலக சாதனை செய்த தமிழ்ப்படம்!

கேன்ஸ் திரைப்பட விழா வரும் மே 17ஆம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் இந்த விழாவில் பங்கேற்க ஏஆர் ரகுமான், நயன்தாரா உள்பட பல திரையுலக பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

அது மட்டுமின்றி கேன்ஸ் திரைப்பட விழாவில் மாதவன் நடித்த ’ராக்கெட்டரி’ உள்பட ஒருசில தமிழ் படங்களும் திரையிடப்பட உள்ளன. இந்த நிலையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு உலக சாதனை செய்த பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

இதுகுறித்து பார்த்திபன் கூறியபோது, ‘சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் படவிழாவில் என் ’இரவில் நிழல்’ திரையிடப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சி கலந்த உள்ளடக்கத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன். தமிழோடு கேன்ஸ் பறக்க தயாராகிறேன்' என்று கூறியுள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.