கோலி இல்லாத நேரத்தில் ஹிட்மேன் ரோஹித்தின் சாதனை… உற்சாகத்தில் கொண்டாடும் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் கேப்டன் விராட் கோலி இலங்கைக்கு எதிரான டி20 போட்டித் தொடரில் விளையாடவில்லை. இந்நிலையில் ஹிட் மேன் ரோஹித் சர்மா கோலி செய்த ஒரு சாதனையை முறியடித்திருக்கிறார்.
இந்தியக் கிரிக்கெட் அணி சர்வதேச அளவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து 10 முறை வெற்றிப்பெற்றுள்ளது. இதனால் வெற்றிக்கரமான கேப்டனாகவும் ரோஹித் சர்மா கொண்டாடப்பட்டு வருகிறார். இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்திருக்கிறார். இதற்கு முன்பு நியூசிலாந்து வீரர் குப்தீல் 3,299 ரன்களுடன் முதல் இடத்தில் இருந்தார். அடுத்து இந்திய வீரர் விராட் கோலி 3,296 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்தார்.
இந்நிலையில் ரோஹித் சர்மா இலங்கைக்கு எதிரான போட்டியில் 32 பந்துகளுக்கு 44 ரன்களை எடுத்து 3,307 ரன்களுடன் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மேலும் நியூசிலாந்து வீரர் குப்தீல் தற்போது எந்தப் போட்டிகளிலும் விளையாடாமல் இருக்கிறார். இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் கோலியும் விளையாடவில்லை. இந்நிலையில் ரோஹித் சர்மா இதுவரை இலங்கைக்கு எதிரான 15 போட்டிகளில் 299 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதனால் இவர் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் அதிரடி காட்டுவார் என்றும் சர்வதேச அளவில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற இவருடைய சாதனை சில காலங்களுக்கு இப்படியே நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
கேப்டன் ரோஹித் சர்மாவைத் தவிர இலங்கைக்கு எதிரான போட்டியில் ஓப்பனர் இஷான் கிஷனும் தனது அதிரடியைக் காட்டி ஒரு புது சாதனையைப் படைத்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டிகளில் இஷான் கிஷன் சிறப்பாக விளையாடவில்லை என்று விமர்சிக்கப்பட்ட நிலையில் தற்போது இலங்கைக்கு எதிரான போட்டியில் 56 பந்துகளுக்கு 10 பவுண்டரி 3 சிக்ஸர்களை விளாசி 89 ரன்களை எடுத்துள்ளார்.
இதையடுத்து ஒரே போட்டியில் அதிக ரன்களை எடுத்த இந்திய விக்கெட் கீப்பர் வரிசையில் இஷான் கிஷன் இணைந்துள்ளார். இதற்கு முன்பு ரிஷப் பண்ட் ஒரே போட்டியில் 65 ரன்களையும் கே.எல்.ராகுல் 57 ரன்களையும் தோனி 56 ரன்களையும் எடுத்துள்ளனர். அந்த வகையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் டி20 போட்டிகளில் சர்வதேச அளவில் அதிக ரன்களை எடுத்த கேப்டன் ரோஹித் சர்மாவையும் ஒரே போட்டியில் அதிக ரன்களை விளாசிய விக்கெட் கீப்பர் இஷான் கிஷனையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com