ஆன்லைன் வகுப்பால் தெறித்து ஓடுபவர்களுக்கு மத்தியில்… அதிலேயே உலகச் சாதனை படைத்த நம்ம ஊரு பொண்ணு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா தாக்கத்தால் பள்ளி, கல்லூரி படிப்புகள் அனைத்தும் ஆன்லைன் முறைக்கு மாறியிருக்கிறது. இந்த அனுபவம் ஆரம்பக் கட்டத்தில் உற்சாகமாகத்தை ஏற்படுத்தினாலும் போகப்போக ஒருவித சலிப்புத் தட்டும் உணர்வு தோன்றுவதாக மாணவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் ஆன்லைன் வகுப்பு குறித்த பிரச்சனைகளால் சில தற்கொலைகள்கூட நடைபெற்றன. இதனால் ஆன்லைன் வகுப்புகளையே ரத்து செய்யுமாறும் சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
நிலைமை இப்படி இருக்கும் கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் வெறுமனே 90 நாட்களில் 350 ஆன்லைன் படிப்புகளைப் படித்து அதில் உலகச் சாதனையே படைத்து இருக்கிறார். கேரள மாநிலம் கொச்சி அடுத்த எலமக்காரா பகுதியைச் சேர்ந்தவர் ஆரத்தி ரகுநாத். இவர் கொச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் யுஜி இரண்டாமாண்டு படித்து வருகிறார். கொரோனா காரணமாக தொடங்கப்பட்ட ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பிய இவர் கோர்ஸ் எரா எனும் திட்டத்தின் மூலம் 350 ஆன்லைன் படிப்புகளை முடித்து இருக்கிறார்.
அதிலும் குறிப்பாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம், டென்மார்க் பல்கலைக் கழகம், வெர்ஜீனியா பல்கலைக் கழகம், நியூயார்க் மாகாணப் பல்கலைக் கழகம், ரோசெஸ்டர் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக் கழகங்கள் வழங்கிய வகுப்புகளில் தற்போது தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
ஒரே நேரத்தில் இத்தனை வகுப்புகளில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாது அந்தப் படிப்புகளை உற்சாகமாகக் கற்றுக்கொண்ட ஆரத்திக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இவரது அனுபவத்தை உலகச் சாதனையாக அங்கீகரித்து சர்வதேச சாதனை மன்றம் பாராட்டுகளைத் தெரிவித்து உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout