உலகின் மிக நீள பேருந்து பாதை டெல்லி-லண்டன் விரைவில் தொடக்கம்: எத்தனை நாள், எவ்வளவு கட்டணம்?
- IndiaGlitz, [Sunday,August 30 2020]
உலகின் மிக நீளமான பேருந்து பாதையான டெல்லி முதல் லண்டன் வரையிலான பேருந்து பாதை விரைவில் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த பேருந்து 70 நாட்களில் 18 நாடுகளை கடந்து செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. 20 ஆடம்பர இருக்கைகள் கொண்ட இந்த பேருந்து டெல்லியில் கிளம்பி மியான்மர், தாய்லாந்து, லாவோஸ் வழியாக முதல் கட்டமாக செல்லும்.
அதன் பின் இரண்டாவது கட்டமாக சீனா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு சென்று மாஸ்கோவை சென்றடையும். அதன்பின் அடுத்த கட்டமாக கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பா வழியாக லண்டனை சென்றடையும். அதன்பின் பேருந்து மீண்டும் அதே பாதையில் லண்டனில் இருந்து டெல்லிக்கு திரும்பி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பேருந்தில் பயணம் செய்வதற்காக 40 ஆயிரம் பேர் இதுவரை முன்பதிவு செய்துள்ளதாகவும் விரைவில் இந்த பேருந்து சேவை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு முடிந்தவுடன் பேருந்து தொடங்கும் சரியான தேதி அறிவிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது.
இந்த பேருந்தில் பயணம் செய்ய £15,320 கட்டணம் வசூலிக்கப்படும். இது இந்திய மதிப்பில் சுமார் 15 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகையில் கைடுகள், டூரிஸ்ட் சென்டர்கள், ஹோட்டல்களில் தங்கும் செலவு, சாப்பாடு செலவு, விசா மற்றும் நுழைவு கட்டணம் உள்பட அனைத்தும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த பேருந்தில் வைஃபை வசதி இருப்பதால் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளது என்பதும் பேருந்து முழுவதும் பிசினஸ் கிளாஸ் இருக்கைகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.