உலகில் இதுவே முதல்முறை… தஞ்சை மாணவனைப் பார்த்து பிரமித்துப்போன நாசா!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தஞ்சையைச் சேர்ந்த இளம் மாணவர் ஒருவர் உருவாக்கிய சாட்டிலைட் மாடல்களைப் பார்த்து நாசா விஞ்ஞானிகளே அதிர்ந்து போயுள்ளனர். காரணம் உலகில் இதுவரை இவ்வளவு எடை குறைந்த சாட்டிலைட்டை வேறுயாரும் உருவக்கியதே இல்லை. இதனால் நாசா ஆய்வு நிறுவனம் தஞ்சை மாணவர் உருவாக்கிய சாட்டிலைட்டுகள் இரண்டையும் ஆய்வுக்காக, அடுத்த மாதம் விண்வெளிக்கு அனுப்ப இருக்கிறது.
தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் 2 ஆம் ஆண்டு பிடெக் மெக்கட்ரானிக்ஸ் படிக்கும் மாணவர் ரியாஸ்தீன். இவர் அமெரிக்காவின் நாசா ஆய்வு மையத்துடன் இணைந்து தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய Cubes in space எனும் போட்டியில் கலந்து கொண்டார். இந்தப் போட்டிக்காக ரியாஸ் உருவாக்கிய சாட்டிலைட்தான் தற்போது உலக விஞ்ஞானிகளையே பிரமிக்க வைத்திருக்கிறது.
அதாவது ரியாஸ் உருவாக்கி இருக்கும் சாட்டிலைட்டுகள் இரண்டும் உலகிலேயே மிகவும் எடை குறைந்தவை. 33mm உயரம் 33 கிராம் எடை கொண்ட இந்தச் செயற்கைக்கோள்கள் பெம்டோ சாட்டிலைட் பாலி எதரி இமைடு அல்டம் எனப்படும் தெர்மோ பிளாஸ்டிக்கை கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்தச் செயற்கைக்கோள்களில் 11 சென்சார்கள் வைக்கப்பட்டு அவை 17 பாரா மீட்டர்கள் வரை கண்காணிக்கும் திறனுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
உலகின் மிக எடைக் குறைந்த செயற்கைக்கோள்களை பார்த்து வியந்து போன நாசா அதை பரிசோதித்துப் பார்க்கவும் முடிவெடுத்து உள்ளது. இதனால் ரியாஸ் உருவாக்கிய விஷன் சாட் V1 மற்றும் V2 எனப்படும் 2 சாட்டிலைட்டுகளையும் நாசா அடுத்த மாதம் விண்வெளிக்கு அனுப்ப இருக்கிறது. இந்நிலையில் உலக விஞ்ஞானிகளையே வியக்க வைத்த தஞ்சை மாணவர் ரியாஸ்க்கு தமிழக முதல்வர் உட்பட பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments