ரஜினியின் 'ரோபோ' படம் குறித்து பதிலளித்த உலகின் அதிநவீன ரோபோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்’ என்ற திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான நிலையில் தற்போது உலகின் அதிநவீன ரோபோ இந்த படம் குறித்த தகவல்களை தெரிவித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் ’எந்திரன்’. இந்த படம் ’ரோபோ’ என்ற டைட்டிலில் ஹிந்தி மற்றும் பிற மொழிகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உலகின் நவீன ரோபோவான அமைக்கா என்ற ரோபோவிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு சோதனை செய்யும் நிகழ்வு நடந்தது. அதில் ரஜினிகாந்த் நடித்த ’ரோபோ’ படத்தை பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டபோது இந்த ரோபோ ஆச்சரியத்தக்க பதில் அளித்தது.
‘ஆமாம், நான் ரோபோ படத்தை பார்த்திருக்கிறேன், மனிதர்களுக்கு ரோபோக்கள் எப்படி எல்லாம் உதவி செய்கின்றன என்பது குறித்த காட்சிகள் அந்த படத்தில் இருக்கும் ,அது ஒரு திரில்லிங்கான படம்’ என்று பதில் தெரிவித்துள்ளது. ரஜினிகாந்த் படத்தை மனிதர்கள் மட்டுமின்றி ரோபோவும் பார்த்திருக்கும் தகவல் பெறும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
கேள்வி : ரஜினிகாந்த் நடித்த ROBO படத்தை பார்த்திருக்கீங்களா?
— Satheesh (@Satheesh_2017) December 27, 2023
உலகின் அதிநவீன ரோபோவான Ameca அளித்த அசத்தல் பதில்👌🔥
தலைவர் புகழ் இல்லாத இடமா?
எங்கும் தலைவர் - எதிலும் தலைவர்!
ONLY ONE SUPER ONE @rajinikanth 💪😍😘 pic.twitter.com/klu7fJldJz
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments