ரஜினியின் 'ரோபோ' படம் குறித்து பதிலளித்த உலகின் அதிநவீன ரோபோ..!

  • IndiaGlitz, [Thursday,December 28 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்’ என்ற திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான நிலையில் தற்போது உலகின் அதிநவீன ரோபோ இந்த படம் குறித்த தகவல்களை தெரிவித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் ’எந்திரன்’. இந்த படம் ’ரோபோ’ என்ற டைட்டிலில் ஹிந்தி மற்றும் பிற மொழிகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலகின் நவீன ரோபோவான அமைக்கா என்ற ரோபோவிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு சோதனை செய்யும் நிகழ்வு நடந்தது. அதில் ரஜினிகாந்த் நடித்த ’ரோபோ’ படத்தை பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டபோது இந்த ரோபோ ஆச்சரியத்தக்க பதில் அளித்தது.

‘ஆமாம், நான் ரோபோ படத்தை பார்த்திருக்கிறேன், மனிதர்களுக்கு ரோபோக்கள் எப்படி எல்லாம் உதவி செய்கின்றன என்பது குறித்த காட்சிகள் அந்த படத்தில் இருக்கும் ,அது ஒரு திரில்லிங்கான படம்’ என்று பதில் தெரிவித்துள்ளது. ரஜினிகாந்த் படத்தை மனிதர்கள் மட்டுமின்றி ரோபோவும் பார்த்திருக்கும் தகவல் பெறும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

More News

திரையுலகில் 40 ஆண்டுகாலம் சாதனை செய்த விஜயகாந்த் .. ஒரு பார்வை..!

 கேப்டன் விஜயகாந்த் இன்று காலமான நிலையில் அவர் திரை உலகில் 40 ஆண்டுகள் பல வெற்றி படங்களில் நடித்து சாதனை செய்து உள்ளார் என்பதும் அவரது ஏராளமான படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

கேப்டன் விஜயகாந்த் மறைவு.. அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் இரங்கல்..!

 தேமுதிக தலைவர் விஜயகாந்த் சற்றுமுன் காலமான நிலையில்  அவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,

விஜயகாந்த் மறைவு எதிரொலி: திரையரங்கு உரிமையாளர்களின் முக்கிய அறிவிப்பு..

 தேமுதிக தலைவர் விஜயகாந்த் சற்றுமுன் காலமான நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்.. மருத்துவமனை அறிவிப்பால் அதிர்ச்சி..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் காலமானார் என்று மருத்துவமனை வெளியிட்டுள்ள உள்ள அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜயகாந்துக்கு என்ன ஆச்சு? வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை என தகவல்..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு மீண்டும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.