உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் தமிழ்ப்பட நடிகர்!

  • IndiaGlitz, [Thursday,December 26 2019]

உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது இதில் இந்திய நடிகர் ஒருவரும் இடம்பெற்றிருப்பது அதுவும் தமிழ் படமான 2.0 படத்தில் நடித்த நடிகர் அக்சய்குமார் இடம்பெற்றிருப்பது அனைவருக்கும் பெருமையான ஒன்றாக கருதப்படுவது

ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் நிறுவனம் உலக அளவில் அதிக வருமானம் பெறும் நடிகர்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் 2019ஆம் ஆண்டு அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்ற முதல் 10 நடிகர்கள் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்

1. டுவைன் ராக் ஜான்சன்: சம்பளம் ரூ.636 கோடி

2. கிரிஸ் ஹெம்ஸ்வர்த்: சம்பளம் ரூ.543 கோடி

3. ராபர்ட் டவுனி: சம்பளம் ரூ.469 கோடி

4. அக்சய்குமார்: சம்பளம் ரூ.462 கோடி

5. ஜாக்கிசான்: சம்பளம் ரூ.412 கோடி

6. பிராட்லி கூப்பர்: சம்பளம் ரூ.405 கோடி

7. ஆடம்சாண்ட்லர்: சம்பளம் ரூ.405 கோடி

8. கிறிஸ் எவன்ஸ்: சம்பளம் ரூ.309 கோடி

9. பால் ரெட்: சம்பளம் ரூ.291 கோடி

10. வில் ஸ்மித்: சம்பளம் ரூ.249 கோடி