பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், யோகார்ட் பிடிக்குமா? WHO வெளியிட்ட முக்கிய தகவல்!

  • IndiaGlitz, [Sunday,July 16 2023]

உலகச் சுகாதார அமைப்பின் கீழ் செயல்படும் புற்றுநோய்க்கான ஆராய்ச்சி நிறுவனம் IARS முன்னதாக செயற்கை சர்க்கரை (இனிப்பூட்டி) புற்றுநோயை உண்டாக்கும் தன்மையுடன் காணப்படுகிறது எனத் தகவல் தெரிவித்து இருந்தது. ஆனால் முற்றிலும் நிரூபிக்கப்படாத இந்தத் தகவல் குறித்து மேலும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் அது தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

பொதுவாக வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக டேபிள் டாப் எனப்படும் செயற்கை இனிப்பூட்டிகளான சுக்ரோஸ், அஸ்பார்டேம் போன்றவற்றை நீரிழிவு நோயாளிகள் முதற்கொண்டு பலரும் பயன்படுத்துகின்றனர். மேலும் நோயாளிகள் என்றில்லாமல் கோக், 7அப், யோகார்ட் (தயிர்), பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், இருமலுக்கு குடிக்கின்ற டானிக் என்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் 6,000 க்கும் மேற்பட்ட பொருட்களில் இனிப்புக்காக இந்த செயற்கை சர்க்கரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த செயற்கை சர்க்கரை டயட் கோக், ஜீரோ கோக், பெப்சி மேக்ஸ், பற்பசை போன்ற பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் உடல்எடை குறைப்புக்கு இந்த செயற்கை இனிப்பூட்டிகள் பெரிய நன்மையைப் பயக்கும் என்று பலரும் நம்பிக்கை இருந்துவந்தது. ஆனால் உண்மையில் இந்த செயற்கை சர்க்கரை உடல் எடை குறைப்புக்கு எந்த வகையிலும் உதவுவதில்லை என்று WHO முன்னதாக தெளிவுப்படுத்தி இருந்தது.

மேலும் இதுபோன்ற டேபிள் டாப் எனப்படும் செயற்கை இனிப்பூட்டிகளான சுக்ரோஸ், அஸ்பார்டேம் போன்ற பொருட்களில் குறைந்த அளவிற்கே கலோரிகள் இருப்பதையும் பலமுறை WHO சுட்டிக்காட்டியிருக்கிறது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு WHO வெளியிட்ட ஒரு அறிக்கையில் இந்த செயற்கை சர்க்கரை புற்றுநோயை உண்டாக்கும் தன்மையில் காணப்படுகிறது எனக் கூறியிருந்த நிலையில் தற்போது புற்றுநோயை உண்டாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதே தவிர ஏற்படுத்திவிடும் என வகைப்படுத்துவதற்கான ஆதாரங்கள் இல்லை எனத் தெளிவுப்படுத்தி உள்ளது.

காரணம் செயற்கை இனிப்புகளை பயன்படுத்தும் அளவு குறித்த ஆராய்ச்சிகளால் WHO தற்போது புதிய முடிவினை வெளியிட்டு இருக்கிறது.

அதாவது ஒரு மனிதன தன்னுடைய எடையில் ஒரு கிலோவிற்கு 40 மில்லிகிராம் அளவிற்கு செயற்கை இனிப்புகளை நாளொன்றிற்கு எடுத்துக்கொள்ளலாம். இந்த அளவைத் தாண்டும்போது பொதுவாக விளைவுகள் மோசமாக இருக்கும் என்று WHO கூறியிருக்கிறது.

இந்நிலையில் இந்த செயற்கை சர்க்கரையான அஸ்பார்டேமின் என்பது என்ன என்பது குறித்த தெளிவு அவசியம். அமினோ அமிலங்கள் கலந்த கலவையால் உருவாக்கப்படும் ஒன்றுதான் அது. சர்க்கயைவிட 200 மடங்கு இனிப்பானது, அதனால் குறைவான அளவைப் பயன்படுத்தும்போதே பெரிய மாற்றத்தை உணர முடியும். மேலும் இதில் கலோரிகள் மிகக் குறைவு

1965 இல் காயங்களை குணப்படுத்துவற்கான மருந்துகளை கண்டபிடிக்க வேதியியல் அறிஞர் ஒருவர் முயற்சித்தபோது தவறுதலாக கண்டுபிடிக்கப்பட்ட பொருள்தான் இந்த அஸ்பார்டேமின். இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் முழுக்க கடந்த 1980 முதல் இந்த செயற்கை சர்க்கரை பயன்படுத்தபட்டு வருகிறது.

குளிர்பானம், தயிர், போன்ற சாப்பிடும் பொருள்களைத்தவிர இது இருமல் மருந்திலும் பயன்படுத்தப்படுகிறது. நேரடியாக அஸ்பார்டேமின் என்பதைக் காட்டிலும் சிலர் சுக்ரோஸ் என்ற செயற்கை சர்க்கரையையும் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

அஸ்பார்டேமின், சுக்ரோஸ் இரண்டுமே உடலுக்குத் தேவையான அளவைவிட அதிகளவு இனிப்பைத் தரக்கூடிய பொருள்கள்தான். இதன் அளவு கூடிக்கொண்டே போகும்போது நீரிழவு, புற்றுநோயை உண்டாக்கும் தன்மையை ஏற்படுத்தலாம் என்று WHO கூறியிருக்கிறது. ஆனால் முற்றிலும் நோய் பாதிப்பு இருக்கிறது எனக் குறிப்பிடாமல் ஏற்படுத்தும் தன்மையில் இருக்கிறது என்றே WHO கூறியிருக்கிறது.

இதனால் செயற்கை இனிப்பூட்டிகளான அஸ்பார்டேமின், சுக்ரோஸை பயன்படுத்தும்போது அதன் அளவு குறித்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது. செயற்கை இனிப்பூட்டிகள் என்றாலே சிக்கல்தானா? என்ற சந்தேகம் வரலாம்.

வெள்ளைச் சர்க்கரை, செயற்கை இனிபூட்டிகளைத் தவிர இயற்கையான பழங்களிலும் இருந்தும் சர்க்கரை பிரித்தெடுக்கப்பட்டு விற்பனைக்கு கிடைக்கிறது. ஸ்டீவியா எனப்படும் இந்த வகை சர்க்கரைகள் பெரும்பாலும் இயற்கை உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

எனவே குளிர்பான பாட்டில்கள், அடைக்கப்பட்ட தயிர் பாக்கெட்டுகள், இருமல் மருந்து, போன்றவற்றை பயன்படுத்தும்போது அளவு குறித்து அக்கறை காட்ட வேண்டும் என்று WHO வலியுறுத்தி இருக்கிறது.

More News

கோடிக்கணக்கில் Bodyguard-க்கு சம்பளம் கொடுக்கும் சினிமா பிரபலங்கள்… யாரென்று தெரியுமா?

சினிமா என்றாலே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது

ஒரே நேரத்தில் 2 வாலிபருடன் திருமணம்? விண்ணப்பித்த பெண்ணிற்கு செம டிவிஸ்ட்

கேரளாவில் வசித்துவரும் இளம்பெண் ஒருவர், சிறப்பு திருமணச் சட்டத்தின்கீழ் திருமணம் செய்து கொள்ள விரும்பி சார்பதிவாளர் அலவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

சினிமாவில் 60 ஆயிரம் கோடி சொத்துகளை சம்பாதித்த இயக்குநர்? யாரென்று தெரியுமா?

ஹாலிவுட் சினிமாவில் ஹீரோக்கள் சிலர் 500 கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கிய தகவல்களை அடிக்கடி பார்த்திருக்கிறோம்.

கீர்த்தி சுரேஷின் அடுத்த படத்தின் பூஜை.. மாஸ் டைட்டில் அறிவிப்பு..!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்த 'மாமன்னன்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த

'துருவ நட்சத்திரம்': ஒரு வழியாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட கௌதம் மேனன்..!

கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் 'துருவ நட்சத்திரம்' என்ற திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது தடை பட்டதாகவும் பின்னர் ஒரு வழியாக