கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்.. கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரேசில் நாட்டிற்காக உலக கோப்பையை மூன்று முறை பெற்று தந்த கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானதை அடுத்து உலகம் முழுவதிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கிரிக்கெட் விளையாட்டுக்கு பிராட்மேன், சச்சின் போல் கால்பந்து விளையாட்டுக்கு பீலே என்பதும் அவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் என்பதும் தெரிந்ததே. கால்பந்து விளையாட்டு மன்னன் என்று அழைக்கப்படும் பீலே மூன்று முறை உலகக்கோப்பையை வென்ற ஒரே வீரர் என்ற சாதனையை வைத்து உள்ளார்.
1940ஆம் ஆண்டு பிறந்த பீலே 1956 ஆம் ஆண்டு 16வது வயதில் பிரேசில் அணிக்காக விளையாட தொடங்கினார். ஆரம்பம் முதலே அவரது ஆட்டம் அனைவரையும் கவர்ந்ததை அடுத்து 1958ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் பிரேசில் அணியில் இடம் பெற்றார். இளம் வயதிலேயே அவர் மிக அபாரமாக உலக கோப்பை போட்டியில் விளையாடினார். குறிப்பாக அந்த தொடரின் அரையிறுதிப் போட்டியில் தொடர்ச்சியாக 3 கோல் அடித்து அனைவரின் கவனத்தை பெற்றார்.
இதனை அடுத்து 1962, 1970 என மூன்று முறை உலகக்கோப்பையை பிரேசில் வெல்ல காரணமாக இருந்தவர். 1977 ஆம் ஆண்டு கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் கால்பந்து போட்டியின் சிறப்பு தூதராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கால்பந்து ஜாம்பவான் பீலே உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வயது மூப்பு காரணமாக அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை அவரது உடல் ஒத்துழைக்கவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் பீலே இன்று காலமானார். அவரது மறைவை அவரது மகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
மறைந்த பீலேவுக்கு மூன்று முறை திருமணமாகி உள்ளது என்பதும் அவருக்கு ஏழு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout