close
Choose your channels

4வது குழந்தைக்கு தாயான உலகப்புகழ் பெற்ற நடிகை.. காஜல் அகர்வால், அக்சரா ஹாசன் வாழ்த்து..!

Thursday, March 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகப் புகழ்பெற்ற நடிகை தனக்கு நான்காவது குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ள நிலையில் அவருக்கு தமிழ் நடிகைகளான காஜல் அகர்வால், அக்சரா ஹாசன் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வொண்டர் வுமன் உள்பட பல சூப்பர் வுமன் கேரக்டரில் நடித்த நடிகை கால் கடோட் என்பவருக்கு தற்போது 38 வயதாகும் நிலையில் அவருக்கு 4வது குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கால் கடோட் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, ‘எனது அன்பு மகளே, வருக. பிரசவம் என்பது எளிதானது அல்ல என்றாலும் நாங்கள் அதனை கடந்து வந்திருக்கிறோம்.

எங்கள் வாழ்க்கையில் நீ வெளிச்சத்தை கொண்டு வந்துள்ளார். அதனால் உனக்கு, ‘ஓரி’ என்று பெயரை சூட்டியுள்ளோம். ஹீப்ரூ மொழியில் உன் பெயருக்கு ’என்னுடைய ஒளி’ என்று அர்த்தம். எங்கள் இதயம் நன்றியுணர்வால் நிரம்பியிருக்கிறது. பெண்கள் நிறைந்த எங்கள் வீட்டுக்கு உன்னை வரவேற்கிறேன். அப்பாவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு தமிழ் நடிகைகளான காஜல் அகர்வால், அக்சராஹாசன் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

நடிகை கால் கடோட் அவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இது அவருக்கு 4வது பெண் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

’பேட்மேன் v சூப்பர்மேன்’, ‘‘வொண்டர் வுமன்’, ‘வொண்டர் வுமன் 1984’, ‘ஜஸ்டிஸ் லீக்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை கால் கடோட் தற்போது டிஸ்னி நிறுவனம் தயாரிக்கும் ‘ஸ்னோ ஒயிட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment