வார்த்தை இல்லாமலே பேசும் எமோஜிகள் பற்றிய சுவாரசியக் கதை !

  • IndiaGlitz, [Saturday,July 17 2021]

சோஷியல் மீடியாக்களில் அதிகளவு பயன்படுத்தப்படும் எமோஜிகளைப் பற்றி பலரும் அறிந்து இருப்போம். வார்த்தையே இல்லாமல், மொழியைக் கடந்து, நாட்டைக் கடந்து, உலகில் உள்ள அனைவராலும் உணர்ந்து கொள்ளக்கூடிய ஒரு உணர்ச்சி மொழி எமோஜி. இந்த எமோஜியை முதன் முதலில் ஜப்பானியர்கள்தான் குறியீட்டு வடிவத்தில் பயன்படுத்தி வந்தனர்.

அதாவது ஜப்பான் நாட்டு மக்கள் இமெயில் அனுப்பும்போது நிறுத்தக்குறியைப் பயன்படுத்தி சிரிப்பு :-), சோகம் :-(, அழுகை ;-( போன்ற குறியீட்டு வடிவங்களைப் பயன்படுத்தி வந்தனர். பின்னாட்களில் இந்தப் பயன்பாடு அதிகரிக்கவே ஜப்பான் ஓவியர் ஷிகேடா குரிட்டா என்பவர் முதன்முதலில் எமோஜி வடிவங்களை உருவாக்கினார். அந்த உருவாக்கம் தற்போது மிகப்பெரிய வர்த்தகமாக மாறியிருக்கிறது.

ஆரம்பத்தில் 176 எமோஜிகள் இருந்த நிலையில் இன்றைக்கு மாஸ்க் அணிந்த எமோஜி முதல் நிலநடுக்கம், பூகம்பம், சூறவாளி என இயற்கை பேரிடர்களுக்கும் எமோஜிகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. காரணம் மொழியைக் கடந்த இந்த எமோஜிகளை மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும். இதற்கு வார்த்தேயே தேவையில்லை என்பதால் மிக விரைவாக சோஷியல் மீடியாக்களில் டைப் செய்து பயன்படுத்த முடியும். அதோடு வார்த்தைகளைத் தாண்டி அதன் வடிவம் பலரையும் ஈர்த்துவிடுகிறது.

இப்படி உலகம் முழுவதும் பெரும் பயன்பாடு கொண்ட எமோஜிகளை சிறப்பிக்கும் விதமாக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஜுலை 17 ஆம் தேதியும் “உலக எமோஜிக்கள் தினம்“ கொணடாடப்படுகிறது. மேலும் எமோஜி பயன்பாடு வர்த்தகமான பிறகு எமோஜி பீடியா என்ற நிறுவனமும் இந்த எமோஜிகளை வைத்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த எமோஜி பயன்பாட்டில் பலரையும் ஈர்த்தது “சிரிப்பை அடக்க முடியாமல் ஆனந்த கண்ணீர் விடும்“ எமோஜிதான் எனக் கூறுகிறது ஒரு ஆய்வு. அதோடு இன்ஸ்டாகிராமில் இதய வடிவிலான எமோஜி அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறதாம்.

இதைத்தவிர “பல்லைக் காட்டுற“ எமோஜி, “வாய் மூடிட்டு இரு“ எனச் சொல்லும் வகையில் வாய் இல்லாமல் இருக்கும் எமோஜி, மண்டை ஓட்டுமேல ஒளிவட்டம் கொண்டு “நி ரொம்ப நல்லவன்டா” எனச் சொல்லுகிற எமோஜி, “அப்பாவியா வாயடைச்சு நிற்கிற“ எமோஜி, “முகத்தில் பஞ்ச் வைக்கிற“ எமோஜி, “குழப்பத்தில் ஆழ்ந்து இருக்கும்“ எமோஜி, “இப்படியே போச்சுன்னா அழுதுறுவேன்“ எனக் கதறும் எமோஜி, “ஓ மை காட்“ என வியப்பை வெளிப்படுத்தும் எமோஜி என இதன் பயன்பாடு உணர்ச்சிக் கடலைத் தாண்டி நிற்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

More News

50 ஆண்டுகளில் இதுதான் முதல்முறை: 'விக்ரம்' படப்பிடிப்பு குறித்து கமல்ஹாசன்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகும் 'விக்ரம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது என்பதும்,

என் மகன் உயிர் பிழைக்க ஒருவகையில் விஜய் தான் காரணம்: நாசரின் நெகிழ்ச்சியான பேட்டி!

பிரபல நடிகர் நாசர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் எனது மகன் உயிர் பிழைக்க ஒருவகையில் விஜய் தான் காரணம் என்று கூறியிருப்பது விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய பெருமையாக உள்ளது.

சூர்யா படத்தில் டி.இமான் அறிமுகம் செய்யும் பாடகி!

சூர்யாவின் அடுத்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் டி இமான் அவர்கள் பாடகி ஒருவரை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார் 

ஆப்கான்  மோதல்....! பிரபல புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திகி  கொலையுண்ட பரிதாபம்....!

தாலிபான்களுக்கும் - பாதுகாப்புப் படையினருக்கும் இடையில், ஆப்கானிஸ்தானில் கடும் மோதல் நிலவி வருகிறது.

தலைகீழாக யோகா செய்யும் பிக்பாஸ் ரம்யா பாண்டியன்: வீடியோ வைரல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ரம்யா பாண்டியன் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக உள்ளவர் என்பதும் குறிப்பாக அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு