உலகப் பொருளாதாரம் 90 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பேரடியைச் சந்திக்கும்!!! சர்வதேச நிதி ஆணையம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் காரணமாக உலகப்பொருளாதாரம் கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரிய இழப்பை சந்தித்து வருகிறது என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்ட்லினா ஜார்ஜிவா எச்சரித்துள்ளார். இந்த பாதிப்பை வரும் 2021 இல் பாதியளவிற்கு மட்டுமே சரிசெய்ய முடியும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக உலகில் அனைத்து தொழில் நிறுவனங்களும் முடங்கியுள்ளன. அமைப்புச் சாரா தொழிலாளர்கள் தங்களது அடிப்படைத் தேவைகளுக்கே அல்லாடும் நிலைமை அதிகரித்து வருகிறது. இன்னும் சில நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்க முடியாத நிலையில் வேலை குறைப்பை அறிவிக்கின்றன. விமான சேவை நிறுவனங்கள் முற்றிலுமாக தங்களது பொருளாதாரத்தை இழந்திருக்கின்றன. இப்படியிருக்கும்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சில நாடுகள் தங்களது ஊரடங்கினை நீடிக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
கொரோனா ஊரடங்கினால் உலகம் முழுவதும் 330 கோடி மக்கள் தங்களது வேலைகளை இழந்துள்ளனர் என முன்னதாக ஐ.நா. சபை அறிக்கை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் சர்வதேச நிதி ஆணையம் உலகப்பொருளாதாரம் குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறது. இந்த பொருளாதார இழப்பீடுகளில் வளரும் நாடுகள் கடும் பாதிப்பை சந்திக்க வேண்டிவரும் எனவும் வளர்ந்த நாடுகள் இந்நிலைமை சரிசெய்ய முன்வரவேண்டும் எனவும் கூறியிருக்கிறார். இந்த பாதிப்பை வரும் ஆண்டில் முழுமையாக சரிசெய்யவும் முடியாது எனவும் தெரிவித்து இருக்கிறார்.
அமெரிக்காவில் கடந்த வாரங்களில் மட்டும் வேலையிழந்தோர்களுக்கான நிவாரண நிதி 2,30,000 ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. பிரிட்டன் அரசு நடத்திய கணக்கெடுப்பில் உலகம் முழுவதம் ஊரடங்கினாலும் கொரோனா பாதிப்பினாலும் 780 கோடி மக்கள் ஏழ்மைக்குத் தள்ளப்படுவார்கள் எனக் குறிப்பிட்டு இருக்கிறது. இந்நிலைமையை சரி செய்ய பல ஆண்டுகள் தேவைப்படும் எனவும் கருத்துக்கூறியிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com