இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி: மழை நீடித்தால் என்ன நடக்கும்?
- IndiaGlitz, [Tuesday,July 09 2019]
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி ஆட்டம் இன்று மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 211 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தற்போது மழையால் ஆட்டம் தடைபட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது பெய்து கொண்டிருக்கும் மழை நீடித்தால் என்ன நடக்கும்? என்பதை பார்ப்போம். அரையிறுதி போட்டியின் விதிகளின்படி மழையால் ஆட்டம் தடைபட்டால் ரிசர்வ் டே' விதியின்படி ஆட்டம், நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து தொடரும். அதாவது இன்று இனிமேல் மழையால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் 46.2வது ஓவரில் இருந்து நாளை போட்டி நடக்கும்.
ஒருவேளை நாளையும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் லீக் போட்டியில் அதிக புள்ளிகள் எடுத்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்திய அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்
அதேபோல் இறுதிப்போட்டியில் மழை பெய்தால், ரிசர்வ் டே முறை பின்பற்றப்பட்டு ரிசர்வ் டே'யிலும் மழை பெய்தால் இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்