83 திரைப்படம் மூலம் கோடிகளை அள்ளிக்குவித்த ரியல் வீரர்கள்… நடந்தது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு காலத்தில் பலமே இல்லாத அணியாக பார்க்கப்பட்ட இந்தியக் கிரிக்கெட் அணி, கேப்டன் கபில்தேவ் தலைமையில் கடந்த 1983 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை பல நெருக்கடிக்கு மத்தியில் வென்றது. இந்த வெற்றிக்குப் பின்னால் இந்திய வீரர்கள் பட்ட கஷ்டத்தையும், எதிர்கொண்ட சவால்களையும் மையமாக வைத்து தற்போது பாலிவுட்டில் “83“ படம் உருவாக்கப்பட்டு இன்னும் சில தினங்களில் ரிலீசாக உள்ளது.
ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் கபில் தேவ்வாக லீட் ரோலில் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ளார். இவரை தவிர தமிழ் நடிகர் ஜீவா கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகை தீபிகா படுகோன் போன்ற முக்கியப் பிரபலங்கள் நடித்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன்பு துபாயில் உள்ள பிரம்மாண்ட கட்டடிமான புர்ஜ் கலுஃபாவில் ஒளிப்பரப்பானது.
இதையடுத்து ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்றிருக்கும் இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வரும் எனவும் படக்குழு அறிவித்திருக்கிறது. இந்நிலையில் உண்மை கதையைத் தழுவி எடுத்திருப்பதால் கிரிக்கெட் வீரர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிமை தொகையை படக்குழு ஏற்கனவே அளித்துவிட்டதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அந்தவகையில் கேப்டன் கபில்தேவ்விற்கு “83“ படக்குழு ரூ.5 கோடி படக்குழு அளித்துள்ளதாகவும் ஒட்டுமொத்தமாக அனைத்து வீரர்களுக்கும் சேர்த்து ரூ.15 கோடி கொடுக்கப்பட்டதாகவும் தகவல் கூறப்படுகிறது.
“83“ திரைப்படத்தில் ரன்வீர் சிங்- கபில்தேவ் வேடத்திலும், நடிகர் ஜீவா- கிருஷ்ணமார்ச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்திலும் தாஹிர் ராஜ் பாசின்- சுனில் கவாஸ்கர் வேடத்திலும் ஜதின் சர்னா- யஷ்பால் ஷர்மா வேடத்திலும் சாகிப் சலீம்- மொஹிந்தர் அமர்நாத் வேடத்திலும், தைரியா கர்வா- ரவி சாஸ்திரி வேடத்திலும் ஹார்டி சந்து- மதன் லால் வேடத்திலும் அம்மி விர்க்- பல்விந்தர் சந்துவாகவும் சாஹில் க்ட்டார்- சையத் கிர்மானியாகவும் சிராக் பாட்டீல்- சந்தீப் பாட்டிலாகவும் பங்கஜ் திரிபாதி அணியின் மேலாளராக பிஆர் மன்சிங்காகவும் நடித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com