உலக சதுரங்க சாம்பியன் போட்டியில் 8 வயது அரியலூர் சிறுமி சாதனை!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜார்ஜியாவில் நடைபெற்ற உலக சதுரங்க சாம்பியன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று அரியலூரைச் சேர்ந்த 8 வயது சிறுமி சாதனைப் படைத்துள்ளார்.
உலக சதுரங்க கழகத்தின் சார்பாக ஜார்ஜியாவில் 8-18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக சதுரங்க சாம்பியன் போட்டி நடத்தப்பட்டது. கடந்த 6 ஆம் தேதி துவங்கி 12 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா, உஸ்பெகிஸ்தான், அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டனர்.
அதில் அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் பகுதியில் வசித்துவரும் சரவணன் என்பவருடைய மகள் சர்வாணிகாவும் கலந்து கொண்டுள்ளார். 8 வயதான இவர் அப்பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உலக சதுரங்க சாம்பியன் போட்டியில் கலந்து கொண்ட இவர் 11 சுற்றுகளில் விளையாடி 8 சுற்றுகளில் வெற்றிப்பெற்றுள்ளார். இதையடுத்து வெண்கலப் பதக்கத்தை வென்று சிறிய வயதிலேயே சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்ற இவர் தேசிய அளவிலான போட்டிகளில் 2 முறை சாம்பியன் பட்டத்தையும் ஆசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் சாம்பியன் பட்டத்தையும் வென்ற நிலையில் தற்போது உலகச் சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
மேலும் வருகிற காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக சர்வாணிகா தன்னை தயார்ப்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் வெண்கலப் பதக்கம் வென்று வந்த அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments