கொரோனா பாதிப்பால் உயிரிழந்த உலகப் பிரபலங்கள்!!!
- IndiaGlitz, [Tuesday,April 28 2020]
உலகில் பல முக்கிய அரசியல் தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்கள் உட்பட பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வயது காரணம் மற்றும் நோயின் தீவிரம் போன்ற காரணங்களால் சிலர் கொரோனாவால் உயிரையும் இழந்திருக்கின்றனர். அவர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு.
1.அப்பா கியாரி – நைஜீரிய ஜனாதிபதியின் ஆலோசகராகப் பணியாற்றிய கியாரிக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதை அந்நாட்டு அரசாங்கம் மார்ச் 24 அன்று உறுதிப்படுத்தியது. சிகிச்சைப் பெற்றுவந்த அவர் நோயின் தீவிரத்தால் ஏப்ரல் 17 அன்று உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின.
2.ஹெய்தர் பாஸ் –சுதந்திர துருக்கி அரசியல் கட்சயின் தலைவரான ஹெய்தர் பாஸ் ஏப்ரல் 14 அன்று துருக்கியின் டிராப்ஸன் மாகாணத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் கொரோனா பதிப்பினால் உயிரிழந்தார்.
3.ஸ்டீவன் டிக் – புடாபெஸ்டில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தின் துணைத் தலைவரான ஸ்டீவன் டிக் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துவிட்டதை மார்ச் 25 அன்று இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் உறுதிப்படுத்தியது.
4.ஃபிலாய்ட் கார்டோஸ் – அமெரிக்காவின் டாப் செஃப் சமையல் கலைஞர் ஃபிலாய்ட் கார்டோஸ் மார்ச் 25 அன்று உயிரிழந்தார். நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருந்ததாக உறுதிச்செய்யப்பட்டது.
5.மனு திபாங்கோ –86 வயதான கேரூன் (Afro-Jaz) ஜாஸ் இசைக்கலைஞரான மனு திபாங்கோ கொரோனா பாதிப்பால் மார்ச் 24 அன்று உயிரிழந்ததாக அவரது பிரதிநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.
6.அன்டோனியோ வியேரா மான்டீரோ- ஸ்பெயின் நாட்டில் உள்ள மிகப்பெரிய வங்கியான சாண்டாண்டரின் போர்த்துகீசியக் கிளையின் தலைவரான அன்டோனியோ வியேரா மான்டீரோ கொரோனா பாதிப்பினால் மார்ச் 18 அன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 73 என்பதும் குறிப்பிடத்தக்கது.
7.கென் ஷிமுரா- மிகச்சிறந்த ஜப்பான் நகைச்சுவை நடிகரான கென் ஷிமுரா கொரோனா பாதிப்பினால் மார்ச் 30 அன்று இறந்ததாக செய்திகள் வெளியாகியது.
8.டேவிட் ஹோட்கிஸ் – United Kingdom க்கு சொந்தமான லங்காஷயர் கிரிக்கெட் கிளப்பின் தலைவர் டேவிட் ஹோட்கிஸ் மார்ச் 30 அன்று கொரோனா பாதிப்பினால் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியிட்டப்பட்டது.
9.ஆலன் மெரில் – I Love Rock and Roll பாடலைப் பாடியவர் புகழ்பெற்ற இசைக்கலைஞரும் பாடகருமான ஆலன் மெரில் கொரோனா பாதிப்பினால் மார்ச் 29 அன்று உயிரிழந்தார்.
10.ரஃபேல் கோம்ஸ் நீட்டோ - பாரிஸை நாஜி படைகளிடம் இருந்து விடுவித்த ஸ்பெயின் படையின் கடைசி உறுப்பினர் ரஃபேல் கோம்ஸ் நீட்டோ மார்ச் 31 அன்று கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்தார்.
11. பிரானிஸ்லாவ் பிளாசிக் – செர்பிய நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் மாநில செயலாளரும் பழமைவாத முற்போக்குக் கட்சியின் முக்கிய உறுப்பினருமான பிரானிஸ்லாவ் பிளாசிக் ஏப்ரல் 1 அன்று கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தார்.
12. நூர் ஹசன் ஹுசைன் – சோமாலியாவின் முன்னாள் பிரதமர் நூர் ஹசன் ஹுசைன் ஏப்ரல் 1 ஆம் தேதி லண்டன் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தார்.
13. எடி லார்ஜ் - Little and Lardge என்ற கதாபாத்திரத்தால் பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர் எடி லார்ஸ் ஏப்ரல் 2 ஆம் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தார். அவருக்கு வயது 78 என்பதும் குறிப்பிடத்தக்கது.
14. டாம் டெம்ப்சே – NFL அணியின் முன்னாள் கால்பந்து வீரரான டாம் டெம்ப்சே தனது 63 ஆவது வயதில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளார்.
15. லூயிஸ் செபுல்வேதா – சிலி எழுத்தாளரான லூயிஸ் செபுல்வேதா தனது 70 ஆவது வயதில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளார்.
16. ஹெர்சன் அல்வாரெஸ் - அமெரிக்காவின் முன்னாள் செனட் சபை உறுப்பினர் ஹெர்சன் அல்வாரெஸ் தனது 80 ஆவது வயதில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளார். அவரது மனைவியும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
17. அஹ்மத் இஸ்மாயில் ஹுசைன் ஹுடைடி – நவீன சோமாலிய இசையை உருவாக்கிய ஹுசைன் ஹுடைடி தனது 90 ஆவது வயதில் லண்டனில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார்.