கொரோனா அச்சம்!!! கைகுலுக்கலைத் தவிர்த்த உலகப் பிரபலங்கள்; சுவாரசியமான தருணங்கள்!!!

ஒருவரின் கைகளை இன்னொருவர் இறுக்கமாகப் பிடித்து குலுக்கி தனது அன்பையும் வணக்கத்தையும் தெரிவிப்பது உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப் படும் ஒரு வழக்கம். இது நம்பிக்கை ஏற்படுத்தும் பழக்கமாக உலகம் முழுக்க வரவேற்கப் படுகிறது. தற்போது கொரோனா தொற்று கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், முன்னெச்சரிக்கையாகப் பலரும் கைகுலுக்குவதைத் தவிர்த்து வருகின்றனர்.

உலகின் முக்கியப் பிரபலங்கள் இந்த மாதிரியான தருணங்களில் என்ன செய்வது என்று தெரியாமல் முதலில் தடுமாறி பின்பு இந்திய வழக்கமான வணக்க முறையினையும் பின்பற்றி வருகின்றனர். ஆனால் பெரும்பாலான உலகத் தலைவர்கள் மற்றவர்களைப் பார்த்து கைக்குலுக்க வேண்டிய நேரத்தில் பெரிய சிரிப்பை மட்டுமே பதிலாக வழங்கி வருகின்றனர். காரணம் கைகளைப் பார்க்கும் போதே அவர்களது மனதில் கொரோனா பற்றிய நினைவுகள் தொற்றிக் கொள்கிறது.

இப்படி கைகுலுக்குவதைத் தவிர்த்த உலகத் தலைவர்களின் சில சுவாரசியமான தருணங்கள் இங்கே தொகுக்கப் பட்டு இருக்கிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அயர்லாந்து பிரதமருடனான சந்திப்பின்போது கைகுலுக்குவதைத் தவிர்த்து இருக்கிறார். அதற்குப் பதிலாக அவர் செய்த காரியம் தற்போது அனைத்து இந்தியர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அயர்லாந்து பிரதமரை வரவேற்ற அதிபர் ட்ரம்ப் தனது இரண்டு உள்ளங்கைகளையும் குவிப்பதற்கு முயற்சி செய்வது போல வணக்கத்தைத் தெரிவித்தார். மேலும், தனது வணக்க முறைக்கான காரணத்தையும் அவர் தெரிவித்து இருந்தார் என்பதே இங்கு முக்கியமானது.

கை குலுக்காமல், என்ன செய்வதென்று தெரியாமல் நான் திகைத்தேன். ஆனால் அண்மையில் இந்தியாவிற்கு சென்று வந்தபோது, அங்கு அனைவரும் தங்களது இருகைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்தனர். அந்த முறை மிகவும் எளிமையாக இருந்தது. எனவே அதை இப்போது பின்பற்றுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

மார்ச் 2 ஆம் தேதி, ஜெர்மன் அதிபர் Angela Merkel பெர்லினில் நடைபெற்ற உலகத் தலைவர்கள் மாநாட்டிற்கு வருகை தந்தார். அப்போது தனது உள்துறை அமைச்சருக்கு கைகுலுக்க முற்பட்டார். ஆனால் அமைச்சர் மிக எச்சரிக்கையாக கைகுலுக்க மறுத்தது அங்குள்ள பலராலும் வெகுவாக ரசிக்கப் பட்டது.

மார்ச் 10 ஆம் தேதி United kingdom க்கான இலங்கையின் வெளியுறவு துறை அமைச்சர் சரோஜா சிறிசேனா தனது கணவர் டாக்டர் சுதாத் தல்பேஹவாவுடன் இங்கிலாந்து ராணியை சந்தித்து இருக்கிறார். அந்தச் சந்திப்பின் போது இங்கிலாந்து ராணி எலிசபெத் கைகுலுக்களை தவிர்த்து இருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. எப்போதும் தன் கைகளில் கையுறைகளை போட்டுக் கொண்டு இருக்கும் ராணி, தற்போது கையுறைகள் அவசியமில்லை என்பதால் தனது கையுறைகளை தவிர்த்து வருகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் 2020 ஆம் ஆண்டிற்கான அறக்கட்டளை விருது விழாவின் போது மிக எச்சரிச்சையாக தனது கைகளை மற்றவர்களுடன் குலுக்காமல் தவிர்த்து இருக்கிறார். அவர் சந்தித்த அனைத்து பிரபலங்களையும் கைகூப்பி வரவேற்றார் என்பது மகிழ்ச்சிக்குரியது.

தற்போது, விளையாட்டு வீரர்கள் கைகளைக் குலுக்குவதற்கு பதிலாக தங்களது முஷ்டிகளை இடித்துக் கொள்ளும் Fist Bump முறையை பின்பற்றி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சீனாவில் யாரும் கைகளைக் குலுக்க வேண்டாம் என்று பல இடங்களில் விளம்பரப் பலகைகள் வைக்கப் பட்டு இருக்கின்றன. ஜெர்மனியில் கைகுலுக்குவதற்கு மாற்றாக பின்பற்ற வேண்டிய பழக்கங்களை குறித்து விழிப்புணர்வும் செய்யப் பட்டு வருகிறது.

கைகுலுக்கும் வழக்கம் எப்போது ஆரம்பித்தது???

இந்தப் பழக்கம் சுமார் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் இருந்தே இருப்பதாக பல வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கைகுலுக்குவது போன்ற பழைய நூற்றாண்டின் சிலைகளையும் நம்மால் பார்க்க முடிகிறது.

முதலில் கைகளைக் குலுக்கும் பழக்கம் போர் வீரர்கள் மற்றும் மன்னர்களிடம் தான் ஆரம்பித்து இருக்கிறது. மன்னர்கள் இருவர் சந்தித்துக் கொள்ளும் போது தங்களிடம் எந்த கருவியும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்வதற்காகவே இப்படி கைகளை நீட்டிக் குலுக்கிக் கொண்டிருக்கின்றனர்.

More News

நாளை இசை வெளியீடு, இன்று 'வாத்தி ரெய்டு': விஜய் ரசிகர்கள் உற்சாகம்

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை 6.30 மணிக்கு சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது

கொரோனாவிற்கு மருந்து??? மாட்டுக் கோமியம் அருந்திய இந்து மகா சபையினர்!!! வைரலாகும் வீடியோ

கொரோனா நோய் தொற்றுக்கு இதுவரை எந்தத் தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்காத நிலையில் சமூக ஊடகங்களில் பல்வேறு வதந்திகளும் தடுப்பு வழிமுறைகளும் தொடர்ந்து

போலி Hand Sanitizer பறிமுதல்!!! ஹரியாணா மாநில அதிகாரிகள் நடவடிக்கை!!!

இந்தியாவில் கொரோனாவில் பாதிப்பு எண்ணிக்கை 82 ஆக உயர்ந்து இருக்கிறது. மேலும், 2 உயிரிழப்பு ஏ

கொரோனா வைரஸால் தாமதமாகும் கார்த்தியின் அடுத்தப் படம்: பரபரப்பு தகவல்

கார்த்தி நடித்த 'கைதி' மற்றும் 'தம்பி' ஆகிய இரண்டு திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் 'சுல்தான்'.

மூன்று வருடங்களுக்கு பின் மீண்டும் களமிறங்கும் லட்சுமிமேனன்: இளம் நடிகருக்கு ஜோடியாகிறார் 

பிரபு சாலமன் இயக்கிய 'கும்கி' என்ற படத்தில் அறிமுகமான நடிகை லட்சுமிமேனன் அதன்பின்னர் சசிகுமாரின் சுந்தரபாண்டியன், விஜய்சேதுபதியின் 'றெக்க' என்ற உட்பட பல திரைப்படங்களில் நடித்தார்