இங்கிலாந்து: 160,100 சதுர அடியில் உலகில் மிகப்பெரிய மால் இன்று திறப்பு:
Send us your feedback to audioarticles@vaarta.com
இங்கிலாந்து நாட்டில் உள்ள பிர்மிங்காம் என்ற நகரில் இன்று உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் திறக்கப்பட்டுள்ளது. பிரைமார்க் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மால் இன்று திறப்பு விழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கானோர் இந்த மாலில் நுழைய வெளியே காத்திருந்தனர்.
160,100 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான மால் உலகின் மிகப்பெரிய மால் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் உள்ள மால் இதனைவிட 5000 சதுர அடி குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஐந்து மாடிகளாக உள்ள இந்த மாலில் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விதவிதமான உடைகள், உலகில் உள்ள அனைத்து பிராண்ட் காலணிகள், அழகுசாதன பொருட்கள், வீட்டிற்கு தேவையானவை என இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை என்ற அளவுக்கு இந்த மால் பிரமாண்டமாக உள்ளது.
திருமண நாள், பிறந்த நாளை கொண்டாடும் வசதியும் இந்த மாலில் உண்டு. இன்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்ட இந்த மாலில் முதல் நாளில் மட்டும் சுமார் 5000 பார்வையாளர்கள் வந்ததாக கூறப்படுகிறது. இங்கிலாந்து மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொழுதுபோக்கு இடமாக இந்த இடம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments