உலகின் தலைசிறந்த வாட்ச் மேக்கரை சந்தித்த தனுஷ்.. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Sunday,December 08 2024]

உலகின் தலைசிறந்த சுவிஸ் நாட்டை சேர்ந்த வாட்ச் மேக்கரை இங்கிலாந்து நாட்டில் நடிகர் தனுஷ் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், திரைப்படங்கள் மட்டுமின்றி மற்ற விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக, கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை அவர் விரும்பி பார்ப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல், தனுஷுக்கு விதவிதமான வாட்சுகள் வாங்குவதிலும் பெரும் விருப்பம் உள்ளது. உலகில் எங்கு வாட்ச் கண்காட்சி நடந்தாலும் அதை பார்க்க செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில், இங்கிலாந்து சென்றபோது அங்கு உலகின் தலைசிறந்த வாட்ச்மெக்கரான எப். பி. ஜோர்ன் என்பவரை சந்தித்துள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து, உலகின் மிகப்பெரிய வாட்ச் மேக்கரை சந்தித்ததில் எனக்கு மிகவும் பெருமை, என்றும், இதுவே தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது, என்றும் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள நிலையில், 5 லட்சத்துக்கு மேல் லைக்குகள் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், நடிகர் தனுஷ் தற்போது குபேரா மற்றும் இட்லி கடை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வரவிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'விடாமுயற்சி' ரிலீஸ் தேதியை உறுதி செய்த சுரேஷ் சந்திரா.. குஷியில் ரசிகர்கள்..!

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி'  படத்தின் ரிலீஸ் தேதியை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா உறுதி செய்துள்ள நிலையில், ரசிகர்கள் உற்சாகம் ஆகியுள்ளனர்.

என் ஆயுள் ரேகை நீயடி.. சைந்தவியுடன் மீண்டும் இணைந்த ஜிவி பிரகாஷ்..!

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி ஆகிய இருவரும் பிரிவதாக சமீபத்தில் அறிவித்த நிலையில், விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் மீண்டும் இணைந்து

நடிகர் காளிதாஸ் ஜெயராம் திருமணம்.. தமிழ்நாட்டின் ஜமீன் வீட்டு பெண் தான் மணமகளா?

பிரபல நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் திருமணம் இன்று நடைபெற்ற நிலையில், அவரை திருமணம் செய்து கொண்டவர் தமிழ்நாட்டின் ஜமீன் வீட்டு பெண் என்று கூறப்படுவது

இது ஒரு கெட்ட கனவாக இருக்க கூடாதா? ராஷ்மிகா, சமந்தாவை அடுத்து பாதிக்கப்பட்ட இன்னொரு நடிகை..

தற்போதைய நவீன டெக்னாலஜியில் ஒருவரை போலவே இன்னொருவரை ஆபாச வீடியோவாக மாற்றி டிரெண்டாக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது, குறிப்பாக டீப்பேக் என்ற செயலி

பிக்பாஸ் எவிக்சனில் திடீர் திருப்பம்.. இந்த வாரம் ஒன்றல்ல 2 போட்டியாளர்கள்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் வார இறுதியில் ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்பட்டு வருகிறார்