வொர்க் ஃபரம் ஹோம் கொடுத்த வரம்… 6 இடத்தில் வேலைப்பார்த்து கோடீஸ்வரனாகும் இளைஞர்!
- IndiaGlitz, [Wednesday,February 16 2022]
ஐரோப்பியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா நேரத்தில் வொர்க் ஃபரம் ஹோமில் வேலைப்பார்த்து வந்துள்ளார். இதைப்பயன்படுத்தி ஒரே நேரத்தில் அவர் 6 நிறுவனங்களில் வேலைப்பார்த்து தற்போது கோடீஸ்வரனாக மாறவிருக்கும் தகவல் பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
ரெட்டிட்டர் எனும் சோஷியல் மீடியாவில் உரையாடிய இளைஞர் ஒருவர் நான் ஐரோப்பாவை சேர்ந்தவர். ஐடி நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்த நான் கொரோனா நேரத்தில் வீட்டில் இருந்தபடியே வேலைப்பார்க்க வேண்டி வந்தது. ஆனால் இரண்டாவது வேலையைத் தேடும் அளவிற்கு நிதிச்சுமை அதிகரித்தால் தொடர்ந்து ஆன்லைனில் வேலைகளைத் தேடினேன். எனக்கு 6 நிறுவனங்களில் முழுநேர வேலைக் கிடைத்தது.
ஒரு சாப்ட்வேர் உருவாக்குநராக இருந்துவரும் நான் அந்தத் துறையில் சிறப்பாக பணியாற்றுவேன். இப்படியே 6 நிறுவனங்களிலும் என சிறந்த உழைப்பை செலுத்தி வேலையை சரியான நேரத்திற்கு முடித்து தற்போது 7,000 அமெரிக்க டாலரை ஒரே வருடத்தில் ஈட்டவிருக்கிறேன். மேலும் நான் வேலைப்பார்க்கும் நிறுவனத்தில் மற்றவர்கள் யாருடனும் அதிகமாகப் பேசமாட்டேன் என்பதால் நிறுவனங்கள் என்னைக் கண்டுகொள்ள வில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஒரே வருடத்தில் வீட்டில் இருந்தபடியே 7,000 அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் 5.27 கோடி சம்பாதித்த இருக்கும் இந்த இளைஞரைக் குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவரைப் பலரும் பாரட்டி வரும் அதே வேளையில் 32 லட்சம் மக்கள் கொரோனா நேரத்தில் வேலைக்கிடைக்காமல் தவித்து வந்துள்ளனர் என்ற மாற்றுக் கருத்தையும் தெரிவித்துள்ளனர்.