வேலை இல்லையா? கொரோனா நேரத்தில் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க எளிய வழி…
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பரவல் காரணமாக உலகமே பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. மேலும் ஊரடங்கு காரணமாக புதிய வேலைவாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் இளைஞர்கள் பலரும் தங்களது படிப்பை முடித்துவிட்டு வீடுகளில் வெறுமனே அமர்ந்து இருக்கின்றர். அதோடு இந்நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாத இளைஞர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை தங்களது நேரத்தை செல்போனில் செலவிட்டு வருகின்றனர்.
இதுபோன்ற சமயங்களில் ஆன்லைனில், அதுவும் வீட்டில் இருந்தபடியே எளிய முறையில் பணத்தை ஈட்டுவதற்கு சில வெப்சைட்டுகள் நமக்கு வழிவகை செய்து கொடுக்கின்றன. இந்த வெப்சைட்டுகள் மூலம் கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி அதில் பணத்தைச் சம்பாதிக்க முடியும். இதற்காக எந்த மெனக்கெடலும் தேவையில்லை. மேலும் நமக்கு பிடித்த துறைகளில் நம்மை மென்மேலும் வளர்த்துக் கொள்ள இந்த வேலைகள் நமக்குப் பக்க பலமாக அமையலாம்.
இதற்காக நம்மிடம் இருக்க வேண்டிய ஒன்றே ஒன்று செல்போன் மட்டுமே. இந்தச் செல்போன் ஏறக்குறைய எல்லோரிடமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதைப் பயன்படுத்தி நம்மை வளர்த்துக் கொள்கிறோமா? அல்லது பணம் ஈட்டுகிறோமா? என்பதே கேள்வி. இதனால் ஆன்லைனில் எளிய முறையில் சம்பாதிப்பது குறித்து ஒரு பார்வை.
வேலைவாய்ப்புகள்- ஆன்லைனில் வழியாக Freelance முறையில் நிறுவனங்களுக்கு வேலை செய்து கொடுக்கலாம். இதற்கான ஊதியத்தை நேரடியாக வங்கிக் கணக்கிலேயே பெற்றுக் கொள்ளலாம். மேலும் இதில் திறமை, படிப்பு போன்ற விஷயங்கள் நமக்கு சாதகமாக அமையும்போது பெரிய அளவிலான வருமானத்தையும் வளர்ச்சியையும் இதில் அடைய முடியும். இதற்காக Chegg India, Freelance India, Freelancer, Upwork, Fiverr போன்ற வெப்சைட்டுகள் இயக்கப்படுகின்றன.
இதுபோன்ற வெப்சைட்டுகளில் Copy writing, Translation, Graphic designing, Video enhancing, app growth or advertising and marketing போன்ற வேலைகள் கொட்டிக் கிடக்கின்றன. இதில் இணைந்து பணியாற்றுவதற்கு முதலில் அந்த வெப்சைட்டுகளில் பதிவு செய்து கொண்டு வேலையைத் தொடங்கலாம். மேலும் அதன் மூலம் நீங்கள் இணைத்து இருக்கும் வங்கிக் கணக்கில் ஊதியத்தை பெற்றுக் கொள்ளலாம். படிப்பு, திறமைக்கு ஏற்ப நமது வருமானமும் கூடிக்கொண்டே போகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Teaching- பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாடம் நடத்த உங்களிடம் திறமை இருக்கிறதா? அல்லது தகுதி இருக்கிறதா? உடனே Udacity, Udemy, Lyndra போன்ற இணையத்தளத்தை பாருங்கள். இந்த இணையத்தளங்கள் வாயிலாக மாணவர்களுக்கு ஆலோசனை கொடுப்பது அல்லது பாடம் நடத்துவது போன்றவற்றை செய்து பணத்தை ஈட்டுங்கள். இந்த இணையத்தளத்தில் உங்களை நீங்களாவே விளம்பரமும் படுத்திக் கொண்டு உங்களுக்கான வாய்ப்புகளைத் தேட முடியும்.
இதைத்தவிர Vendantu, Tutoron போன்ற பயிற்சித் தளங்களில் உங்களை இணைத்துக் கொண்டும் மாணவர்களுக்கு பாடம் நடத்தலாம். இதன் மூலம் உங்களது திறமைக்கேற்ப வருமானத்தை ஈட்ட முடியும்.
Social Media- Instagram, Youtube போன்ற சமூக வலைத்தளங்களில் follower களை அதிகளவில் ஈர்த்து அதன் மூலம் வருவமானத்தை ஈர்க்கலாம். இதில் கம்பெனிகள் கொடுக்கும் பணத்தோடு சேர்த்து தனிப்பட்ட முறையில் விளம்பரங்களை ஈர்த்தும் சம்பாதிக்க முடியும். இதைப்போலவே Blogging, Vlogging செய்தும் பணம் ஈட்ட முடியும். இதற்காக இலவச பிளாக்கிங் தளங்களும் இணையத்தில் கிடைக்கின்றன.
மேலும் amazon association link மூலம் மார்க்கெட்டிங் செய்வது, வெப்சைட் உருவாக்கி கொடுப்பது போன்றவற்றை செய்து பணத்தைச் சம்பாதிக்கலாம். அதோடு Podcast, Audio books போன்றவற்றின் மூலம் குரல்களைப் பதிவு செய்து டப்பிங் செய்து கொடுத்தும் சம்பாதிக்கலாம். இதுபோன்ற வசதிகளைப் பயன்படுத்தி நேரத்தை பயனுள்ளதாக்குகங்கள். கொரோனா நேரத்தில் பாக்கெட்டை நிரப்பவும், திறமையை வளர்க்கவும் இந்த வழிமுறைகள் உதவியாக இருக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com