தாய்ப் பாசம்.. 10 அடி பாம்புடன் சண்டையிட்ட மரங்கொத்தி..! வைரல் வீடியோ.
Send us your feedback to audioarticles@vaarta.com
தன் முட்டைகளையும் குஞ்சுகளையும் காப்பாற்ற தாய் மரங்கொத்தி ஒன்று பத்து அடி நீள பாம்புடன் சண்டையிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. பெரு நாட்டில் உள்ள காடுகளில் 11 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தன டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இரைக்காக வெளியில் சென்றிருக்கும் போது மரங்கொத்தியின் கூட்டுக்குள் பாம்பு நுழைந்துவிட்டது. இதை கவனித்த மரங்கொத்தி பாம்பை வெளியே இழுத்துப் போடுகிறது. அதன் பிறகு கொத்தத் தொடங்குகிறது. திரும்பி சீரும் பாம்பானது மரங்கொத்தியை கடிக்கிறது, தாக்கப்பட்டவுடன் கீழே விழும் மரங்கொத்தி மீண்டும் பறந்து வந்து பாம்பை தாக்குகிறது.
பலரும் தாயின் அன்புக்கு இணையில்லை என இந்த வீடியோவை பகிந்து வருகின்றனர். 2009-ம் ஆண்டு அசாஃப் அட்மோடியா என்பவரால் பெரு நாட்டில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக தகவல் கிடைக்கிறது. பாம்பும் மரங்கொத்தியும் இறுதியில் இறந்துவிட்டதாக தெரிகிறது.
All the forces on this planet, will never beat that of a mothers love.
— Susanta Nanda IFS (@susantananda3) March 1, 2020
Wood pecker saving its chicks after a fierce air duel with the snake???? pic.twitter.com/mvBo7OWN74
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout