குப்பையில் கிடந்த நாற்காலி 12 லட்சத்திற்கு விற்கப்பட்ட அதிசயம்!

  • IndiaGlitz, [Friday,January 28 2022]

ஆஸ்திரியா நாட்டில் குப்பையில் கிடந்த ஒரு நாற்காலி 16,000 டாலருக்கு விற்கப்பட்டு இருப்பதோடு அது ஒரு வரலாற்று தலைவர் உருவாக்கியதும் என்பதும் தெரியவந்துள்ளது.

ஆஸ்திரியாவில் கடைக்காரர் ஒருவர் குப்பைப் போல குவிந்துகிடந்த பழைய மரச்சாமான் கடையிலிருந்து வெறும் 5 டாலருக்கு சணல் நாற்காலி ஒன்றை வாங்கியுள்ளார். முதலில் அதன் பின்னணி குறித்து தெரியாத அவருக்கு அந்த நாற்காலியே தற்போது 16 ஆயிரம் டாலர்களை சம்பாதித்து கொடுத்திருக்கிறது. காரணம் 18 ஆம் நூற்றாண்டு கலை நுட்பத்தை வைத்து அந்த நாற்காலியை பிரபல ஆஸ்திரிய ஓவியரான கொலோமன் என்பவர் கடந்த 1902 ஆம் ஆண்டு உருவாக்கியுள்ளார்.

இவர் பழமையை விரும்பும் வியன்னாவின் பிரிவினைக்கு முக்கியப் பங்காற்றிய போராட்டத் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தலைவரால் உருவாக்கப்பட்ட நாற்காலியை அந்தக் கடைக்காரர் பழைய குப்பையில் இருந்து தேடிப்பிடித்து இருக்கிறார். மேலும் சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் இந்த நாற்காலியானது தொலைபேசி மூலம் 16250 டாலருக்கு விற்பனை ஆகியிருக்கிறது. இந்திய மதிப்பில் இது 12 லட்சத்தைத் தாண்டும் என்பது நமக்கு வியப்பாக இருக்கிறது.