வொண்டர் வுமன் திரைவிமர்சனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னொரு காலத்தில் ஜூயஸ் என்னும் கடவுள் உலகத்தையும் மனிதர்களையும் படைக்கிறார். மனிதன் அமைதியாக தன் வாழ்க்கையை நடத்துகிறான். ஜூயஸின் மகனான ஏரிஸ் மனிதர்களிடையே பொறாமையையும் வன்மத்தையும் வளர்த்து மனிதர்களை அழிவு பாதைக்கும் போர்கள் செய்பவர்களாகவும் மாற்றுகிறான். இதனால மற்ற கடவுள்களுக்கும் ஏரிஸ்க்கும் போர் மூழ்கிறது. ஏரிஸ் அனைத்து கடவுள்களையும் கொல்கிறான். ஜூயஸ் தன் கடைசி பலம் முழுக்க ஒன்று சேர்த்து ஏரிஸை வீழ்த்துகிறார், அவர் இறப்பதற்கு முன் ஏரிஸ் திரும்ப வந்தால் அவனை வீழ்த்த ஒரு தேவதையை விட்டுச் செல்கிறார். அந்த தேவதை தான் டயானா என்னும் வொண்டர் வுமன்.
வொண்டர் வுமன் ஒரு அழகான தேவதை கதையாக ஆரம்பிக்கிறது.பெண்கள் மட்டுமே சூழ்ந்த தெமிஸ்கிரா தீவில் ஒரே ஒரு குழந்தையாக வளர்கிறாள் டயானா. டயானாவிற்கு ஆபத்து நேராமல் காப்பாற்றும் தாய் ஹிப்பாலிட்டா, போர் கலைகளை கற்றுக்கொடுக்கு ஆண்டியோப் என டயானா அந்த தனி உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது ஸ்டீவ் ட்ரெவார் அந்த தீவுக்கு வருகிறான். அவன் மூலம் உலகில் நடக்கும் போரை அறிந்து அதற்கு காரணம் ஏரிஸ் தான் எனவும் அவனை கொல்வது தான் தனது கடமையென முடிவு செய்து தீவை விட்டு வெளியேறுகிறாள் வொண்டர் வுமனாக.இது தான் கதை.
படத்தில சின்ன சின்ன விசயங்கள் கூட அழகா இருந்தது, அதுல எனக்கு ரொம்ப பிடித்தது முதல் சூப்பர்மேன் படத்துல கிரிஸ்டோவர் ரீவ்ஸ் லூயிஸ் லேனை துப்பாக்கி குண்டுல இருந்து காப்பாத்தும் காட்சியை இதில அப்படியே மறுஉருவாக்கம் செய்திருந்தனர், அதாவது டயானா ஸ்டீப் ட்ரெவாரை காப்பாத்துவது போலே அமைந்தக் காட்சி அது. சின்னக் காட்சியில் பழைய டிசி படத்திற்க்கு சம்பந்தமும், இந்தப் படம் எப்படி அதில் இருந்து அப்படியே மாறுபடுகிறது என்பதை சொல்வது போல அமைந்தக் காட்சி அது.
வொண்டர் வுமனோட கதாப்பாத்திரம் காமிக் புக் வொண்டர் வுமனுக்கு நெருங்கி வந்திருக்கு. சண்டைகளில் எவ்வளவு அதிகமான உக்கிரத்தை காட்டினாலும் சாதாரண மக்களிடம் பரிவைக் காட்டும் வொண்டர் வுமனின் கதாப்பாதிரத்தை அழகாக திரைக்கு கொண்டு வந்திருந்தாங்க பேட்டி ஜென்கின்ஸ். ஹாலிவுட்ல ஏன் பெண் இயக்குனர்கள் கம்மியா இருக்காங்கன்னு தெரியல. ஆனா வொண்டர் வுமன் படத்திற்கு ஜென்கின்ஸ் நல்ல தேர்வு . சின்ன சின்ன சென்சிபளான விசயங்களை படத்தில வைத்திருந்தார், ஐஸ் கீரிம் வாங்கிவிட்டு அந்தக் கடைக்காரரை வொண்டர் வுமன் பாராட்டுவது போன்ற காட்சிகள் (இந்தக் காட்சி அப்படியே நியூ 52காமிக்கில் இருக்கு) தான் படத்தில வொண்டர் வுமன் கதாப்பாத்திரத்தை நிறுவுது.
ஸ்டீவ் ட்ர்வார்க்கும் டயானக்கும் இடையே இருக்கும் ரொமான்ஸ் நல்லா இருந்தது. உளவாளியாக ஜெர்மன் படைகளுக்குள் கலப்பது, தப்பிச் செல்வது, கெமிக்கல வெப்பன்களை அழிப்பது என இவருக்கு என தனி டிராக் ஓடினாலும் டயானா கூட இவருக்கு வரும் காதல் அழகாக காட்சியமைக்கப்பட்டிருக்கு. மத்த சூப்பர்ஹீரோ படங்கள்லயும் ரொமான்ஸ் உண்டுனாலும் இந்தப் படத்தை போல் படம் நெடுக இருக்குமான்னு தெரியல.
மேன் ஆப் ஸ்டீல்ல சூப்பர்மேன் தனக்கு இருக்கும் சக்திகளை பெரிதாக விரும்பவில்லை. ஒரு மனிதனாக இருக்கவே கிளார்க் கெண்ட் ஆசைப்படுகிறான். ஆனா அந்தப் பிரச்சனைலாம் வொண்டர் வுமனுக்கு இல்லை.தன்னோட ரியாலிட்டிய ஏற்றுக்கொண்டு தன்னோட சக்திகள் மூலமா உதவுறாங்க அவ்ளோ தான். போரை நிறுத்துவதற்காக மனிதர்களின் தியாகத்தை பார்த்தப் பின் வொண்டர் வுமனின் சக்திகளைப் பார்க்கும் பொழுது பேட்மேன் v சூப்பர்மேனில் இவர் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்காங்கன்னு தோனுது.
டிசி படங்களில் மேன் ஆப் ஸ்டீல்க்கு பிறகு ஒளிப்பதிவில் அழகானப் படம் வொண்டர் வுமன். தெமிஸ்கிரா தீவு, 1910களின் லண்டன்,பெல்ஜியம், கடைசி சண்டைக்காட்சி என எல்லாம் அழகான இடங்களை அழகான கலர் காம்பினேசன்களோட இருந்தது.பேட்மேன் v சூப்பர்மேன் கொஞ்சம் கலர் டார்க் டோன்ல இருக்கும் இதுல அந்தப்பிரச்சனைலாம் இல்ல. இசை வொண்டர் வுமன் தீம் தான் இப்போ இருக்குற எல்லா சூப்பர் ஹீரோ தீம்களில் ரொம்ப பாப்புலரானது. இதை விட என்ன வேணும். வொண்டர் வுமன் ரொம்ப குழ்பபாத சிம்பிளான ஒரு சூப்பர்ஹீரோ படம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com