தமிழில் வெளியாகும் வார்னர் பிரதர்ஸின் 'வொண்டர் வுமன் 1984': தேதி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின் தற்போது இந்தியா முழுவதும் திரையரங்குகள் திறக்கப்படுவதை அடுத்து இந்திய திரைப்படங்கள் மட்டுமின்றி ஹாலிவுட் திரைப்படங்களும் ரிலீஸ் ஆக தயாராகி வருகின்றன.
கிறிஸ்டோபர் நோலனின் ’டெனட்’ திரைப்படம் இந்தியாவில் நாளை ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் தற்போது வார்னர் பிரதர்ஸ் தயாரித்த ’வொண்டர் வுமன் 1984’ என்ற படமும் இந்தியாவில் ரிலீஸ் செய்வதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் டிசம்பர் 24-ஆம் தேதி இந்தியா முழுவதும் தமிழ் உள்பட அனைத்து இந்திய மொழிகளில் ரிலீஸ் செய்ய உள்ளதாக வார்னர் பிரதர்ஸ் அறிவித்துள்ளது. தமிழ் தெலுங்கு இந்தி உள்பட அனைத்து மொழிகளிலும் டிசம்பர் 24ஆம் தேதி இந்தியாவில் வெளியாகும் நிலையில், அதே நாளில் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் வெளியாகும் என்றும் வார்னர் பிரதர்ஸ் அறிவித்துள்ளனர்.
சூப்பர் உமன் 1984 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்தியாவில் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
??????
— Warner Bros. India (@warnerbrosindia) December 3, 2020
Wonder Woman1984 will release in cinemas in India on December 24!#WonderWoman1984 #WW84 #WonderWoman #GalGadot pic.twitter.com/u0z1v6MLBb
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments