கொரோனா பணிக்கு சென்ற பெண் போலீஸ் பீச் ரோட்டில் மரணம்
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும், தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பேருந்து தவிர சாலைகளில் கிட்டத்தட்ட அனைத்து வாகனங்களும் சென்று கொண்டிருக்கின்றன. இதனால் மீண்டும் சென்னையில் டிராபிக், விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா பணிக்கு சென்ற பெண் போலீஸ் பீச் ரோட்டில் விபத்து காரணமாக தலைநசுங்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுப்பேட்டை ஆயுதப்படையில் பணியாற்றி வந்த பெண் போலீஸ் பவித்ராவுக்கு இன்று நந்தனம் பகுதியில் கொரோனா தடுப்பு பணிக்காக டியூட்டி போடப்பட்டிருந்ததால் பவித்ரா தன்னுடன் வேலை பார்க்கும் மற்றொரு பெண் போலீசுடன் நந்தனத்துக்கு மெரினா பீச் வழியாக டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த கண்டெய்னர் லாரி ஒன்று பவித்ராவின் டூவிலரில் மோதியதால் பவித்ராவின் தலை கண்டெய்னர் லாரியில் சக்கரத்தில் நசுங்கியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அண்ணா சதுக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பவித்ராவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கண்டெய்னர் லாரி டிரைவரை கைது செய்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். கொரோனா பணிக்கு சென்ற பெண் போலீஸ் ஒருவர் விபத்தில் மரணம் அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments