கொரோனா பணிக்கு சென்ற பெண் போலீஸ் பீச் ரோட்டில் மரணம்

  • IndiaGlitz, [Tuesday,May 05 2020]

நேற்று முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும், தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பேருந்து தவிர சாலைகளில் கிட்டத்தட்ட அனைத்து வாகனங்களும் சென்று கொண்டிருக்கின்றன. இதனால் மீண்டும் சென்னையில் டிராபிக், விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா பணிக்கு சென்ற பெண் போலீஸ் பீச் ரோட்டில் விபத்து காரணமாக தலைநசுங்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுப்பேட்டை ஆயுதப்படையில் பணியாற்றி வந்த பெண் போலீஸ் பவித்ராவுக்கு இன்று நந்தனம் பகுதியில் கொரோனா தடுப்பு பணிக்காக டியூட்டி போடப்பட்டிருந்ததால் பவித்ரா தன்னுடன் வேலை பார்க்கும் மற்றொரு பெண் போலீசுடன் நந்தனத்துக்கு மெரினா பீச் வழியாக டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த கண்டெய்னர் லாரி ஒன்று பவித்ராவின் டூவிலரில் மோதியதால் பவித்ராவின் தலை கண்டெய்னர் லாரியில் சக்கரத்தில் நசுங்கியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அண்ணா சதுக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பவித்ராவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கண்டெய்னர் லாரி டிரைவரை கைது செய்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். கொரோனா பணிக்கு சென்ற பெண் போலீஸ் ஒருவர் விபத்தில் மரணம் அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News

தலைக்கனத்துடன் இருந்தால் தவிடுபொடி ஆகிவிடுவீர்கள்: மத்திய அரசுக்கு கமல் எச்சரிக்கை

நாடெங்கிலும் கொரோனா வைரஸ் பரபரப்பு, ஊரடங்கு, பசிபட்டினி என்ற பரபரப்பு இருந்து வரும் நிலையில் மத்திய அரசு சத்தமில்லாமல் தமிழகத்திற்கு எதிரான ஒருசில வேலைகளை செய்து வருவதாக தமிழக அரசியல் கட்சி

கொரோனா சிகிச்சையில் வெற்றிபெற்ற Remdesivir!!! மருந்து தயாரிப்பில் இந்தியா முதற்கட்ட வெற்றி!!!

டந்த மாதத்தில் அமெரிக்காவின் சிகாகோ Gilead Sciences மருத்துவப் பல்கலைக்கழகம் Remdesivir மருந்தின் மீதான சோதனையில் வெற்றிப் பெற்றிருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்: முதல்வருக்கு விஜயகாந்த் அறிவுரை

வரும் 7ஆம் தேதி முதல் தமிழகத்தில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரிகள் திறப்பது குறித்த மத்திய அமைச்சரின் அதிரடி உத்தரவு!

நாடு முழுவதும் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வு உட்பட பல தேர்வுகள் பள்ளி அளவில் நடை பெறவில்லை

மாதவரம் பால் பண்ணையில் மேலும் 6 பேருக்கு கொரோனா! பாலுக்கு தட்டுப்பாடு வருமா?

உலகெங்கிலும் மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஏழை பணக்காரர் வித்தியாசமின்றி அனைவரையும் தாக்கி வருகிறது என்பதும், லட்சக்கணக்கான உயிர்களையும் பலியாக்கி வருகிறது என்பதும் தெரிந்ததே.