யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 கிடைக்கும்? பெறுவது எப்படி?

  • IndiaGlitz, [Friday,July 07 2023]

முன்னதாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் யாருக்கெல்லாம் அந்த உரிமைத் தொகை வழங்கப்படும், அதேபோல இந்தத் திட்டம் எப்படி அமல்படுத்தப்படும் என்பது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கட்டமாக ஆலோசனை கூட்டங்களை நடத்தி வந்தார். இந்நிலையில் தற்போது அதுகுறித்த அறிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதேன்படி, செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் திட்டம் துவங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து ரேஷன் கார்டு எந்தக் கடையில் உள்ளதோ அந்தக் கடையில் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும்

பெண் அரசு ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது

பெண் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களான குடும்பத் தலைவிகளுக்கும் இந்த ஆயிரம் ரூபாய் வழங்கப்பட மாட்டாது.

ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறும் குடும்பத் தலைவிகளுக்கும் இந்த உரிமைத் தொகை கிடைக்காது

சொந்தமாக கார் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட மாட்டாது.

ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கும் இந்தத் திட்டம் பொருந்தாது.

3,500 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட மாட்டாது.

செயல்திட்டம்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழகம் முழுவதும் தகவல்கள் திரட்டப்பட உள்ளதாகவும் அந்தத் தகவல்களின் அடிப்படையிலேயே குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளைப் பற்றிய விவரங்களைத் திரட்டும் திட்டத்திற்கு ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ இல் பணியாற்றி வரும் தன்னார்வலர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர்.

இந்தத் தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டிலும் தகவல்களை திரட்டுவார்கள். இவர்கள் ரேஷன் கடைகளில் வைக்கப்பட்டு இருக்கும் பயோ மெட்ரிக் கருவி மற்றும் பிரத்யேக செயலிகளின் விவரங்களை வைத்து குடும்பத் தலைவிகளின் உண்மை நிலவரங்களை ஆராய்ந்து தகவல்களை திரட்டுவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது.

இப்படி குடும்ப அட்டையை வைத்து உண்மை நிலை அறிந்து பின்னரே உரிமைத் தொகை பெறுவதற்கு தகுதி பெற்றவர்களா? என்பதை முடிவு செய்வார்கள்.

இதற்காக ஒரு ஊரில் 5,00 குடும்ப அட்டைத்தாரர்கள் இருந்தால் அவர்களுக்கு பொறுப்பாக ஒரு தன்னார்வலர் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ஒருவேளை ஒரு ஊரில் 1,000 குடும்ப அட்டைதாரர்கள் இருந்தால் 2 தன்னார்வலர்களும் 1,500 அட்டைதாரர்கள் இருந்தால் 3 தன்னார்வலர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த அடிப்படையில் தமிழகத்தில் மொத்தமாக 34,806 நியாய விலைக் கடைகளுக்கு 61,893 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

ஒருபோதும் அடங்காதே, ஓரடி எடுத்து வைத்தால் விடுதலை காற்று: 'மாவீரன்' சிங்கிள் பாடல்..!

 சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியானது

முஸ்லீம் என்பதால் பாகுபாடு இருக்கிறதா? கேள்விக்கு போல்டாக பதிலளித்த பிரபல நடிகை!

பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை ஒருவரிடம் நீங்கள் முஸ்லீம் என்பதால் உங்களுக்கு இந்திய சினிமாவில் பாகுபாடு காட்டப்படுகிறதா?

சொந்த மகனையே பாலியல் வன்கொடுமை செய்த தாய்… 8 வருடமாக நடந்த கோரச் சம்பவம்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காணாமல் போய்விட்டதாக கூறப்பட்ட இளைஞர் ஒருவர் திடீரென கண்டுபிடிக்கப்பட்டு உள்ள நிலையில் 8 வருடமாக அவரது சொந்த தாயே வீட்டிற்குள் அடைத்து வைத்து

இந்தியாவின் காஸ்ட்லி பிச்சைக்காரர்? இவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மும்பை பகுதிகளில் தினமும் பிச்சை எடுத்து வாழ்ந்துவரும் ஒரு நபர் உலகிலேயே மிகப்பெரிய பிச்சைக்காரர் என அறியப்பட்டு இருப்பதோடு அவருடைய வாழ்க்கை முறையைப்

அருண் விஜய்யின் 'மிஷன் சாப்டர் 1' : த்ரில்லிங்கான மேக்கிங் வீடியோ..!

அருண் விஜய் நடிப்பில், ஏ எல் விஜய் இயக்கத்தில், 'அச்சம் என்பது இல்லையே' என்ற படம் உருவாகி வந்த நிலையில் இந்த படத்தின் உரிமையை லைகா நிறுவனம் பெற்ற பிறகு 'மிஷன் சாப்டர் 1'