யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 கிடைக்கும்? பெறுவது எப்படி?
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னதாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் யாருக்கெல்லாம் அந்த உரிமைத் தொகை வழங்கப்படும், அதேபோல இந்தத் திட்டம் எப்படி அமல்படுத்தப்படும் என்பது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கட்டமாக ஆலோசனை கூட்டங்களை நடத்தி வந்தார். இந்நிலையில் தற்போது அதுகுறித்த அறிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதேன்படி, செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் திட்டம் துவங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து ரேஷன் கார்டு எந்தக் கடையில் உள்ளதோ அந்தக் கடையில் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும்
பெண் அரசு ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது
பெண் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களான குடும்பத் தலைவிகளுக்கும் இந்த ஆயிரம் ரூபாய் வழங்கப்பட மாட்டாது.
ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறும் குடும்பத் தலைவிகளுக்கும் இந்த உரிமைத் தொகை கிடைக்காது
சொந்தமாக கார் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட மாட்டாது.
ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கும் இந்தத் திட்டம் பொருந்தாது.
3,500 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட மாட்டாது.
செயல்திட்டம்
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழகம் முழுவதும் தகவல்கள் திரட்டப்பட உள்ளதாகவும் அந்தத் தகவல்களின் அடிப்படையிலேயே குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளைப் பற்றிய விவரங்களைத் திரட்டும் திட்டத்திற்கு ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ இல் பணியாற்றி வரும் தன்னார்வலர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர்.
இந்தத் தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டிலும் தகவல்களை திரட்டுவார்கள். இவர்கள் ரேஷன் கடைகளில் வைக்கப்பட்டு இருக்கும் பயோ மெட்ரிக் கருவி மற்றும் பிரத்யேக செயலிகளின் விவரங்களை வைத்து குடும்பத் தலைவிகளின் உண்மை நிலவரங்களை ஆராய்ந்து தகவல்களை திரட்டுவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது.
இப்படி குடும்ப அட்டையை வைத்து உண்மை நிலை அறிந்து பின்னரே உரிமைத் தொகை பெறுவதற்கு தகுதி பெற்றவர்களா? என்பதை முடிவு செய்வார்கள்.
இதற்காக ஒரு ஊரில் 5,00 குடும்ப அட்டைத்தாரர்கள் இருந்தால் அவர்களுக்கு பொறுப்பாக ஒரு தன்னார்வலர் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஒருவேளை ஒரு ஊரில் 1,000 குடும்ப அட்டைதாரர்கள் இருந்தால் 2 தன்னார்வலர்களும் 1,500 அட்டைதாரர்கள் இருந்தால் 3 தன்னார்வலர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த அடிப்படையில் தமிழகத்தில் மொத்தமாக 34,806 நியாய விலைக் கடைகளுக்கு 61,893 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout