கருப்பையே இல்லாத பெண்கள்: ஒரு கிராமத்தில் நடக்கும் அதிர்ச்சி தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கிட்டத்தட்ட பாதி பெண்கள் கருப்பை இல்லாமல் உள்ள அதிர்ச்சி தகவல் தற்போது சமூக வலைத்தளங்களின் மூலம் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள வஞ்சரவாடி என்ற கிராமத்தில் வசிக்கும் பெண்களில் பெரும்பாலானோர் அங்குள்ள கரும்புத்தோட்டங்களுக்கு வேலைக்கு செல்கின்றனர். இவ்வாறு வேலைக்கு வரும் பெண்களின் கருப்பைகளை கரும்புத்தோட்டத்தின் முதலாளிகள் அகற்றிவிடுவதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
கருப்பை இருந்தால் மாதவிடாய் காலங்களில் பெண்கள் ஓய்வு எடுப்பார்கள் என்ற காரணத்தினால் கருப்பையை எடுக்க சம்மதிக்கும் பெண்களுக்கு மட்டுமே வேலை என்று கரும்பு தோட்ட முதலாளிகள் நிபந்தனையாக வைப்பதாகவும், வறுமையின் காரணமாக இந்த கிராமத்து பெண்கள் இதற்கு சம்மதிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் வேலை பறிபோகும் என்ற காரணத்தால் எந்த பெண்ணும் இதுகுறித்து புகார் தெரிவிக்க முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் சமூக வலைத்தளங்களில் ஓங்கி ஒலித்து வருகின்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com