கருப்பையே இல்லாத பெண்கள்: ஒரு கிராமத்தில் நடக்கும் அதிர்ச்சி தகவல்!

  • IndiaGlitz, [Tuesday,April 16 2019]

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கிட்டத்தட்ட பாதி பெண்கள் கருப்பை இல்லாமல் உள்ள அதிர்ச்சி தகவல் தற்போது சமூக வலைத்தளங்களின் மூலம் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள வஞ்சரவாடி என்ற கிராமத்தில் வசிக்கும் பெண்களில் பெரும்பாலானோர் அங்குள்ள கரும்புத்தோட்டங்களுக்கு வேலைக்கு செல்கின்றனர். இவ்வாறு வேலைக்கு வரும் பெண்களின் கருப்பைகளை கரும்புத்தோட்டத்தின் முதலாளிகள் அகற்றிவிடுவதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

கருப்பை இருந்தால் மாதவிடாய் காலங்களில் பெண்கள் ஓய்வு எடுப்பார்கள் என்ற காரணத்தினால் கருப்பையை எடுக்க சம்மதிக்கும் பெண்களுக்கு மட்டுமே வேலை என்று கரும்பு தோட்ட முதலாளிகள் நிபந்தனையாக வைப்பதாகவும், வறுமையின் காரணமாக இந்த கிராமத்து பெண்கள் இதற்கு சம்மதிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் வேலை பறிபோகும் என்ற காரணத்தால் எந்த பெண்ணும் இதுகுறித்து புகார் தெரிவிக்க முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் சமூக வலைத்தளங்களில் ஓங்கி ஒலித்து வருகின்றது.
 

More News

சட்டசபை தேர்தலிலும் 234 தொகுதிகளில் தனித்து போட்டி! சீமான் அறிவிப்பு

கடந்த 2014ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது மட்டுமின்றி டெபாசிட்டையும் இழந்தது.

பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த ஜடேஜா: உலககோப்பைக்காக வாழ்த்திய மோடி

நேற்று உலகக்கோப்பை கி்ரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் ஒருவர் ஜடேஜா.

 மகேந்திரனிடம் இருந்து நான் கற்று கொண்டது: ராதாரவி 

நடிகர் ராதாரவி பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் வில்லனாக நடித்து வருகிறார். வில்லத்தனமான நடிப்பில் பலவித பரிணாமங்களை, பல வித்தியாசங்களை தனது நடிப்பில் வெளிப்படுத்தியவர் ராதாரவி.

காதல் ஜோடி கொலை வழக்கு: கொலையாளிக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு

8 ஆண்டுகளுக்கு முன் காதல் ஜோடியை கொலை செய்த குற்றவாளிக்கு அளிக்கப்பட்ட தூக்குதண்டனையை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்துள்ளது

மீண்டும் பாட வந்த காந்தக்குரல் பாடகர்! ரசிகர்கள் மகிழ்ச்சி

தமிழ் சினிமாவின் பழம்பெரும் பாடகரும் காந்தக்குரலார் என்று அனைவராலும் போற்றப்படுபவருமான கே.ஜே.ஜேசுதாஸ் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ஒரு படத்தில் பாடியுள்ளார்.