ஆண்களுடைய பொழுதுபோக்குக்கு ஒரு பெண்ணோட உடல் தான் தேவைப்படுகிறதா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை மற்றும் எழுத்தாளர் அணுப்பரமி அவர்கள், அவள் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில்,
தமிழ் தான் என்னை வளர்த்தது.நான் கற்ற தமிழே என்னை அடையாளப்படுத்தியது.சென்னைக்கு வந்து சினிமாவில் பிச்சைக்காரன் படத்தில் வேலை செய்தேன்.பிறகு சின்ன சின்ன கதாப்பாத்திரம் நடித்தேன்.ஆண்டாள் அழகர், பொம்மலாட்டம், மதுரை போன்ற தொடர்களில் நடித்துள்ளேன்.ஒரு ஒற்றை பெற்றோராக வாழ்வதில் நான் பெருமை தான் படுகிறேன்.நிச்சயமாக சுய மரியாதை , தனித்துவம் மிகவும் முக்கியம்.நம்முடைய பலவீனம் வெளியில் தெரியாமல் பார்த்து கொள்வதே புத்திசாலித்தனம்.தனிப்பட்ட முறையில் எனக்கு சில சங்கடங்கள் இருக்கத்தான் செய்கிறது.இருந்தாலும் என்னை நம்பி தான் என் குடும்பம் உள்ளது.எனது கடமையை நிறைவேற்ற இப்போது வரை ஓடி கொண்டே உள்ளேன்.
இந்த சமுதாயம் பொதுவாக பெண்களுக்கு சொல்லி கொடுப்பது என்னவென்றால், அதிகம் பேசக்கூடாது,அறிவாளித்தனமா பேசக்கூடாது, முக்கியமாக ஆண்களை எதிர்த்து பேசக்கூடாது இதைத்தான் சொல்லி கொடுக்கிறது. நம்மால் நமக்கு ஏற்படக்கூடிய வலியை விட இந்த சமுதாயத்தினால் நமக்கு ஏற்படக்கூடிய வலிகள் தான் அதிகம்.அதிலும் தனியாக ஒரு பெண் வாழ்ந்தால் , ஏழையாக இருந்தால் , பாதுகாப்பு துணை இல்லாமல் இருந்தால் எத்தனை விதமான இன்னல்கள் ஏற்படுகிறது என்று சொல்ல வார்த்தையே இல்லை.கற்பனைக்கு எட்டாத பல பிரச்சினைகளை என் வாழ்வில் கடந்து வந்துள்ளேன்.நான் சொல்ல நினைத்தாலும் அதற்கு ஏற்ற சூழ்நிலையோ இடமோ எனக்கு கிடைக்கவில்லை.இதை வெளியில் சொன்னால் உனக்கு தான் ஆபத்து என என்னை அச்சுறுத்தியவர்கள் தான் அதிகம்.குறிப்பாக ஆண்கள்.மனச்சோர்வு,பயம், தயக்கம், கூச்சம் இதை எல்லாம் தாண்டி வெளியில் வர எனக்கு மொத்தமாக முப்பத்து ஐந்து வருடங்கள் தேவைப்பட்டது.இனிமேல் துணிந்து எல்லாவற்றிற்கும் குரல் கொடுக்க நினைக்கிறேன்.
வெற்றிக்கு பிறகு சொன்னால் அது எல்லோரிடமும் போய் சேறும் .அதற்கு முன்னால் பேசினால் அது புலம்பலாக தெரியும்.உண்மையின் ஆழம் யாருக்கும் புரியாது.இன்றைக்கு நமக்கு தடையாக உள்ள சுவரை நாம் உடைத்து சென்றால் தான் இதற்கு பிறகு வரக்கூடிய பெண்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும்.ஒரு பெண் தனக்காக பேசுகின்றாள் எனில் 99% அவளுக்கு எதிரான கருத்துக்கள் தானே இருக்கிறது.உடல் கொச்சையான அவதூறுகள்.இதை தடுத்து கேட்க யாருமே கிடையாது.இந்த நிலை எப்போது மாறும்? இதைப் பார்க்கக்கூடிய ஆண்களும் கெட்டு, தன்னுடைய மனைவி சக தோழியையும் இதே முறையில் நடத்தினால் எல்லாமே சீர்க்கெட்டு தானே போகும்.என்னுடைய மகள்களுக்கு இந்த சமுதாயம் காலங்காலமாக சொல்லிய எதையும் நான் சொல்லி கொடுக்கவில்லை.ஒரு அம்மா தன்னுடைய குழந்தைகளுக்கு எதை சொல்லக் கூடாதோ அதையே நான் சரியான முறையில் சொல்லிக் கொடுத்துள்ளேன்.
பாண்டிச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமைகள் குறித்து எனக்கு உச்சக்கட்டக் கோபம் தான் வந்தது.எங்கெயாவது எந்த பெண்ணாவது ஒரு ஆணை வன்புணர்வு செய்தாள் என்ற செய்தி உள்ளதா? நான் அழுத்தமாக உறுதியாக சொல்கிறேன் ஒரு ஆணுடைய மனநிலை சீக்கிரம் சலிப்படையக் கூடிய மனநிலை.சிலபேர் மட்டும் தான் தன் மனைவி குழந்தைகள் என்று வாழ்கிறார்கள்.இங்கு பலபேர் வேறு ஒரு உடலை தேடித்தான அலைகிறார்கள்.உடல் கவர்ச்சி, ஈர்ப்பு, போதை,வர்ணனை, பெண்களை பற்றி பேசும்போதே ஒரு ஆர்வத்துடன் பேசுவது இந்த மாதிரியான ஆண்கள் மனைவி மீது தன்னுடைய அன்பை காட்டுவதில்லை.மேலும் பயில்வான் ரங்கநாதன், பாண்டியன் பன்னீர் போன்ற ஆட்கள் பெண்களை மட்டுமே குறிவைத்து விமர்சனங்களை பரப்புவது ,பெண்களின் பளிச்சென்று காட்டி சம்பாதிக்கின்றனர்.
.இன்னும் எத்தனை தலைமுறைக்கு பெண்கள் நாங்கள் இதை எதிர்கொண்ட இருப்பது !இது தான் எங்களுக்கான வேலையா ? இவர்களெல்லாம் வாழ சம்பாதிக்க எப்போதுமே ஒரு பெண்ணின் உடல் தேவைப்படுகிறது.எனக்கே அறுவறுப்பா உள்ளது என எழுத்தாளர் அணுப்பரமியின் அனல் பறக்கும் வாதங்களை மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Anvika Priya
Contact at support@indiaglitz.com
Comments