டிக்டாக் வீடியோவால் விலைமாதர்களாக்கப்பட்ட குடும்ப பெண்கள்: அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Monday,November 25 2019]
மதுரையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பொழுதுபோக்கிற்காக டிக்டாக் வீடியோவை பதிவு செய்த நிலையில் இருவரும் தற்போது விலைமாதர்கள் ஆக்கப்பட்டு அவர்களது வீட்டை விட்டு விரட்டப்பட்ட பரிதாபமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஒத்தக்கடை சேர்ந்த இரண்டு பெண்கள் நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில் இருவரும் இணைந்து டிக்டாக் செயலில் தங்கள் நடிப்பு திறனை வெளிப்படுத்தும் வீடியோக்களை இணைந்து பதிவு செய்துள்ளனர். இவர்களது வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பை பெற்றதோடு லைக்ஸ்களும் கமெண்டுக்களும் குவிந்துள்ளன.
இந்த நிலையில் இந்த இரண்டு பெண்களில் ஒருவருக்கு தேனியை சேர்ந்த சுகந்தி என்ற பெண்ணின் நட்பு கிடைத்துள்ளது. இருவரும் தங்களது டிக் டாக் வீடியோக்களை பகிர்ந்து நெருக்கமாகி விட்ட நிலையில் திடீரென சுகந்திக்கும் மதுரை பெண்ணுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுகந்தி தனது மதுரை தோழிகளின் வீடியோக்களை தனது ஆண் நண்பரின் வீடியோக்களுடன் இணைத்து இருவரையும் விலைமாதர்களை போல சித்தரித்து ஒரு வீடியோவை பதிவு விட்டதாக கூறப்படுகிறது .
ஏற்கனவே டிக்டாக்கில் பிரபலமான இந்த தோழிகள் திடீரென விலைமாதர்கள் என்ற கூறப்பட்ட வீடியோவை பார்த்து அவரது ஃபாலோயர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த வீடியோக்கள் வெளிவந்து பயங்கரமாக வைரலாகியதால் இரு தோழிகளின் வீட்டிலும் கடும் நெருக்கடி ஏற்பட்டது அவர்களில் ஒருவர் வீட்டை விட்டு விரட்டப்பட்டு காப்பகத்தில் தங்கியுள்ளதாகவும், இன்னொருவர் நிலைமையும் மிகவும் மோசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தங்களை விலைமாதர்கள் போல் சித்தரித்து வீடியோ வெளியிட்ட சுகந்தி மற்றும் அவரது ஆண் நண்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை காவல் நிலையத்தில் தோழிகள் இருவரும் இணைந்து புகார் அளித்தனர். இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பொழுதுபோக்காக பதிவுசெய்யப்பட்ட டிக்டாக் வீடியோவால் இரண்டு பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.