ஒரு கையில் குழந்தை, மறு கையில் சூட்கேஸ்: 265 கிமீ நடந்து சென்ற இளம்பெண்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் காரணமாக மூன்றாம் முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து நாளை முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு தொடங்கி மே 17ஆம் தேதி முடிவடைகிறது. இதனால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் கடும் சிக்கலில் உள்ளனர்
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெளிமாநில தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயங்கினாலும் அதில் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும் ஏழை எளிய மக்கள் கடந்த பல வாரங்களாக வேலையின்றி சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கும் போது அவ்வளவு கட்டணத்தை செலுத்தி எப்படி செல்ல முடியும் என்றும் கூறப்பட்டு வருகிறது
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் சூரத்திலிருந்து அலகாபாத் வரை சுமார் 265கிமீ ஒரு கையில் குழந்தையுடனும் இன்னொரு கையில் சூட்கேசுடன் ஒரு பெண் நடந்தே சென்று கொண்டிருக்கும் வீடியோ அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அந்த பக்கம் சென்றவர்கள் அந்த பெண்ணிடம் விசாரித்தபோது சூரத்திலிருந்து அகமதாபாத்திற்கு ரயில்கள் சிறப்பு ரயில்கள் செல்கின்றன என்றும், ஆனால் கட்டணம் அதிகமாக இருப்பதால் தன்னிடம் ரயிலில் செல்ல பணம் இல்லை என்றும் அதனால் குழந்தையுடன் நடந்து செல்வதாகவும் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக மத்திய அரசுக்கு கோடிக்கணக்கில் நிதியுதவி கிடைத்துள்ள நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல கட்டணம் இல்லா ரயில்களை இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உண்மையான ஏழை எளிய மக்கள் பயன் பெறுவதற்காக இந்த நடவடிக்கையை பிரதமர் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது
Can't even imagine the plight of this woman, carrying her child & walking from Surat to Allahabad
— Srivatsa (@srivatsayb) May 3, 2020
Railways has only a few trains & charging Ticket + Surcharge??
Modiji, is it so difficult to arrange #FreeMigrantTrains? What are u doing with PMCARES fund?pic.twitter.com/G0zNJP9ixj
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout