குடும்பமே மரணம் அடைய காரணமான டிரைவரை மன்னித்த கருணையுள்ள பெண்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்மேற்கு அயர்லாந்து நாட்டை சேர்ந்த 43 வயது பெண் ஒருவரின் கணவர், மகள் மற்றும் வயிற்றில் இருந்த குழந்தை ஆகிய மூன்று உயிர்கள் மரணம் அடைய காரணமாக இருந்த டிரைவர் ஒருவரை மன்னித்ததோடு, அவர் நலமுடன் இருக்க பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார்.
எல்பர் டுவோமி என்ற 43 வயது பெண் தனது கணவர் கான், ஒன்றரை வயது குழந்தை ஓசின் மற்றும் வயிற்றில் ஐந்து மாத கருவோடு 10 நாள் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.
ஆறு நாட்கள் இன்பச்சுற்றுலா முடிந்து ஏழாவது நாள் அவர்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் ஒன்று தவறான பாதையில் வந்து எல்பர் குடும்பத்தினர் சென்ற காரின்மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கணவர் கான், குழந்தை ஓசின் ஆகியோர்களை பறிகொடுத்த எல்பர், தனது வயிற்றில் இருந்த ஐந்து மாத கருவும் கலைந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் கடந்த 7 வருடங்களாக நடைபெற்று கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த டிரைவரை தான் மன்னித்துவிட்டதாகவும், அவருடைய நலத்திற்காக பிரார்த்தனை செய்வதாகவும் எல்பர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com