காமத்திற்காக பிணங்களைக் கூட விடமாட்டார்கள்… தாலிபான்கள் குறித்து பதறும் இளம்பெண்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆப்கானிஸ்தானில் போலீஸ் படையில் வேலைப்பார்த்து வந்த இளம்பெண் ஒருவர் அங்கிருந்து தப்பி இந்தியாவின் தலைநகரான டெல்லியில் அடைக்கலம் புகுந்துள்ளார். இவர் தாலிபான்கள் குறித்துப் பேசும்போது தாலிபான்கள் குகைகளில் வாழ்க்கை நடத்தியவர்கள். மேலும் காமத்திற்காக பிணங்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள தயக்கம் காட்டுவதில்லை என்ற பகீர் தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.
ஆப்கானிஸ்தான் முழுக்க தற்போது தாலிபான்கள் வசம் சென்றுவிட்டது. இந்நிலையில் அமெரிக்க இராணுவமும் அதன் மீட்பு படையும் காபூல் விமான நிலையத்தைவிட்டு வரும் 31 ஆம் தேதிக்குள் காலி செய்துவிட வேண்டும் என்று தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை ஆப்கானைவிட்டு சென்றுவிட வேண்டும் நினைக்கு பல ஆயிரக்கணக்கான சாமானிய மக்களை அமெரிக்க இராணுவமும் ஜெர்மன் இராணுவமும் அங்கிருந்து மீட்டு வருகிறது.
இதனால் வரும் 31 ஆம் தேதிக்குப் பிறகு எந்தவொரு ஆப்கன் குடிமகனும் அந்த நாட்டைவிட்டு வெளியேற முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. நிலைமை இப்படியிருக்க நாடு முழுவதும் ஆதிக்கம் செலுத்திவரும் தாலிபான்கள் இப்போதே வீட்டிற்குள் இருக்கும் இளம் பெண்களை இழுத்துச் சென்று காம ஈச்சைக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் சிலர் பெண்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றும் அங்கிருந்து தப்பிவந்த 22 வயதான பெண் போலீஸ் அதிகாரி முஸ்கான் தெரிவித்துள்ளார்.
மேலும் பெண் போலீஸ் படையில் வேலைப்பார்த்து வந்த தனக்கும் அச்சுறுத்தல் இருந்த காரணத்தால் அங்கிருந்து தப்பி வந்துவிட்டேன் என்று அதிர்ச்சி பொங்க செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். இத்தகைய தகவல்களைப் பார்க்கும்போது தாலிபான்கள் நாம் நினைத்ததை விட மிகவும் கொடூரமாக இருப்பார்களோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments