ஜெ. மரணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய பெண் கைது

  • IndiaGlitz, [Saturday,February 25 2017]

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று சிகிச்சையின் பலனின்றி காலமானார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் உள்பட பலர் கேள்வி எழுப்பினர். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியான ஆர்.கே.நகரில் தீபா ஆதரவாளர்கள் நடத்திய கூட்டம் ஒன்றில் ராமசீதா என்ற பெண் பரபரப்பான தகவல் ஒன்றை கூறினார். தன்னை அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர் என்று கூறிக்கொண்ட அவர், ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோதே அவர் இறந்து இருந்ததாக கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
இதுகுறித்து அப்பல்லோ நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்ததில் ராமசீதா டாக்டரே இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

More News

கபாலி' நஷ்டம் என திருப்பூர் சுப்பிரமணியம் குற்றம் சாட்டுவது ஏன்? தாணு விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படம் உள்பட சமீபத்தில் வெளியான பெரிய ஸ்டார்களின் திரைப்படங்கள் அனைத்தும் விநியோகிஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நஷ்டத்தை கொடுத்த படங்கள் என்றும், இந்த படங்களின் வசூல் விபரங்கள் பொய்யானவை என்றும் சமீபத்தில் திருப்பூர் சுப்பிரமணியம் குற்றம் சாட்டியிருந்தார்.

பாவனா சம்பவத்திற்கு பின்னர் அதிரடி முடிவு எடுத்த பிரபல நடிகர்

பிரபல நடிகை பாவனா சமீபத்தில் மர்ம கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான அதிர்ச்சி சம்பவத்திற்கு முதன்முதலில் எதிர்ப்பு குரல் கொடுத்தவர் நடிகர் பிரித்விராஜ்

பாலா-ஜோதிகா படத்தில் இணையும் பிரபல நடிகர்

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கவுள்ள அடுத்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

சிதம்பரம் கோவிலில் சிவராத்திரி கொண்டாடிய துப்பறிவாளன் டீம்

விஷால் நடிப்பில் பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கி வரும் 'துப்பறிவாளன்' படத்தின் படப்பிடிப்பு சிதம்பரம் அருகே விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது...

உலக அமைதிக்கு ஒரே தீர்வு யோகாதான். ஆதியோகி சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

இந்துக்களின் முக்கிய புனித நாட்களில் ஒன்றான சிவராத்திரி தினமான நேற்று பாரத பிரதமர் நரேந்திரமோடி கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டிருந்த 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் அவர் பேசியதாவது...