பேஷனில் இது புதுசு… மேலாடைக்குப் பதிலா மெஹந்தி போட்டு அலறவிட்ட இளம்பெண்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பெண்கள் அணியும் ஜாக்கெட்டில் ஜன்னல் வைத்து பார்த்திருப்போம், கட்டம் மற்றும் ஆரி வொர்க் செய்த ஜாக்கெட்டை கூட பார்த்திருப்போம். ஆனால் துணியே இல்லாமல் மேலாடைக்குப் பதிலாக மெஹந்தி (மருதாணி) போட்ட இளம்பெண் புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
“ஆள் பாதி ஆடை பாதி“ என்ற பழமொழி பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் ஒருவர் தன்னுடைய உடலை மறைப்பதற்காக மட்டும் ஆடை உடுத்திய காலம்போய் ஆடை விஷயத்தில் தன்னை வித்தியாசமாகக் காட்டிக்கொள்ள பல இளம் தலைமுறையினர் கடுமையான முயற்சி மேற்கொள்கின்றனர். அதிலும் பெண்கள் சிலநேரங்களில் இதற்காக விசித்திரமான சில முயற்சிகள் செய்வதையும் பார்க்க முடிகிறது.
அந்த வகையில் இளம்பெண் ஒருவர், ஜாக்கெட் எனப்படும் மேலாடைக்கு பதிலாக வெறுமனே மெஹந்தியை மட்டுமே போட்டிருக்கிறார். அழகான சிவந்திருக்கும் மெஹந்தி டிசைன் மற்றும் சிக்கன்கரி வெள்ளை புடவையில் அவர் திருமண நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். இந்தப் புகைப்படம் கடந்த சில தினங்களாக சோஷியல் மிடியாவில் வைரலாகி வருகிறது.
மேலும் விசித்திரமான இந்த உடையைப் பார்த்த நமது நெட்டிசன்ஸ் “கொஞ்சமாவது வெங்கப்படுங்களேன்“ என்று விமர்சித்து கமெண்ட் அடித்து வருகின்றனர். இதைத்தவிர எதை வேண்டுமானாலும் செய்ய துணியும் பெண் சக்திக்கு இதுவும் ஒரு சான்று என மெஹந்தி பிளவுஸ் டிசைனுக்கு சில ரசிகர்கள் பாராட்டுகளைக் குவித்தும் வருகின்றனர்.
Introvert hai, isliye tailor ke paas jati nahi hogi?????? pic.twitter.com/E0TDf8ImTv
— Alpaca Girl???? (@alpakanya) December 1, 2021
What are your thoughts?https://t.co/Q3ID3zE5DK
— IndiaToday (@IndiaToday) November 30, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com