10 வருடமா கல்லறைக்கு விசிட் அடிக்கும் பெண்மணி? விசித்திரம் கொண்ட அதன் பின்னணி!
Send us your feedback to audioarticles@vaarta.com
இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் 48 வயதான பெண்மணி ஒருவர் கடந்த 10 வருடங்களாகத் தொடர்ந்து ஒவ்வொரு கல்லறைக்கும் சென்று இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கல்லறை போட்டோக்களை எடுத்துள்ளார். இதை ஒரு ஹாபியாக எடுத்துக் கொண்டு அனைத்துப் போட்டோக்களையும் ஆவணப்படுத்தியும் வருகிறார்.
பொழுதுபோக்கிற்காக நாம் புத்தகங்களை வாசிக்கலாம், டிராவல் செய்யலாம், ஏன் பழைய நாணயங்களை சேகரித்து வைக்கலாம், அஞ்சல் தலைப்புகளை சேகரிக்கலாம், உடற்பயிற்சி அல்லது விளையாட்டில் ஈடுபடலாம். இப்படி எத்தனையோ ஹாபியான விஷயங்கள் இருக்கும்போது இங்கிலாந்து நாட்டின் நோர்ஃபோக் மாகாணத்தைச் சேர்ந்த லூ காக்கர் எனும் 48 வயதான பெண்மணி கல்லறைகளை நேரில் சென்று அதை போட்டோவாக எடுப்பதை ஹாபியாக வைத்து இருக்கிறார்.
கடந்த 12 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய குடும்ப வரலாற்றைத் தேடிப்போய் அவருக்கு இந்த ஆர்வம் தொற்றிக் கொண்டதாகவும் கூறி இருக்கிறார். இதனால் நோர்ஃபோக் மாகாணத்தில் உள்ள 700 தேவாலயங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை தேடிச் சென்று இதுவரை 2,20,000 போட்டோக்களை எடுத்துள்ளதாகவும் காக்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுவரை 16,00 கல்லறைகளை விசிட் அடித்து இருப்பதாகக் கூறும் காக்கர் இதுபோன்ற ஆவணங்கள் மற்றவர்களுக்கு உதவும் வகையில் தன்னுடைய அனைத்து போட்டோக்களையும் இணையத்திலும் பதிவிட்டு வருகிறார். இதனால் தொலைந்து போனவர்களை தேடும் குடும்பங்களுக்கு இந்த போட்டோக்கள் பயன்படலாம் என்ற உயர்ந்த நோக்கமும் இவருக்கு இருக்கிறது.
அதோடு தான் இதுவரை சேகரித்து வைத்து இருக்கும் கல்லறை போட்டோக்களை வைத்து எதிர்காலத்தில் ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபடப் போவதாகவும் காக்கர் தெரிவித்து உள்ளார். இவரது ஹாபியைக் கேள்விப்பட்ட நெட்டிசன்கள் அவர் எடுத்து வைத்து இருக்கும் கல்லறை போட்டோக்களை ஆர்வத்தோடு பார்வையிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com