10 வருடமா கல்லறைக்கு விசிட் அடிக்கும் பெண்மணி? விசித்திரம் கொண்ட அதன் பின்னணி!

  • IndiaGlitz, [Friday,July 02 2021]

இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் 48 வயதான பெண்மணி ஒருவர் கடந்த 10 வருடங்களாகத் தொடர்ந்து ஒவ்வொரு கல்லறைக்கும் சென்று இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கல்லறை போட்டோக்களை எடுத்துள்ளார். இதை ஒரு ஹாபியாக எடுத்துக் கொண்டு அனைத்துப் போட்டோக்களையும் ஆவணப்படுத்தியும் வருகிறார்.

பொழுதுபோக்கிற்காக நாம் புத்தகங்களை வாசிக்கலாம், டிராவல் செய்யலாம், ஏன் பழைய நாணயங்களை சேகரித்து வைக்கலாம், அஞ்சல் தலைப்புகளை சேகரிக்கலாம், உடற்பயிற்சி அல்லது விளையாட்டில் ஈடுபடலாம். இப்படி எத்தனையோ ஹாபியான விஷயங்கள் இருக்கும்போது இங்கிலாந்து நாட்டின் நோர்ஃபோக் மாகாணத்தைச் சேர்ந்த லூ காக்கர் எனும் 48 வயதான பெண்மணி கல்லறைகளை நேரில் சென்று அதை போட்டோவாக எடுப்பதை ஹாபியாக வைத்து இருக்கிறார்.

கடந்த 12 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய குடும்ப வரலாற்றைத் தேடிப்போய் அவருக்கு இந்த ஆர்வம் தொற்றிக் கொண்டதாகவும் கூறி இருக்கிறார். இதனால் நோர்ஃபோக் மாகாணத்தில் உள்ள 700 தேவாலயங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை தேடிச் சென்று இதுவரை 2,20,000 போட்டோக்களை எடுத்துள்ளதாகவும் காக்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரை 16,00 கல்லறைகளை விசிட் அடித்து இருப்பதாகக் கூறும் காக்கர் இதுபோன்ற ஆவணங்கள் மற்றவர்களுக்கு உதவும் வகையில் தன்னுடைய அனைத்து போட்டோக்களையும் இணையத்திலும் பதிவிட்டு வருகிறார். இதனால் தொலைந்து போனவர்களை தேடும் குடும்பங்களுக்கு இந்த போட்டோக்கள் பயன்படலாம் என்ற உயர்ந்த நோக்கமும் இவருக்கு இருக்கிறது.

அதோடு தான் இதுவரை சேகரித்து வைத்து இருக்கும் கல்லறை போட்டோக்களை வைத்து எதிர்காலத்தில் ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபடப் போவதாகவும் காக்கர் தெரிவித்து உள்ளார். இவரது ஹாபியைக் கேள்விப்பட்ட நெட்டிசன்கள் அவர் எடுத்து வைத்து இருக்கும் கல்லறை போட்டோக்களை ஆர்வத்தோடு பார்வையிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

தேசிய மருத்துவர்கள் தினத்தில் பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடூரம்… வெடிக்கும் சர்ச்சை!

ஒடிசாவைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரை உணவு கொடுக்க சென்ற தாபாவின் ஊழியர்

தமிழகஅரசு கையால் விருது வாங்கிய காப்பகம்… குழந்தையை காசுக்கு விற்றது அம்பலம்!

மதுரையில் உள்ள தனியார் ஆதரவற்றோர் காப்பகம் ஒன்றில் வளர்ந்து வந்த 1 வயது ஆண்

ஒரே வாரத்தில் சிக்கிய ஏடிஎம் கொள்ளையர் தலைவன்: தமிழக போலீஸ் சாதனை!

சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் நூதனமான முறையில் கொள்ளை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர் மர்ம மரணம்: எரிந்த நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு!

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்து இருப்பதாகவும் அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 

சென்னையில் முதல்முறையாக சதமடித்தது பெட்ரோல் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி!

சென்னையில் பெட்ரோல் விலை முதல் முறையாக சதம் அடித்தது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது